ஆட்சியர் ஷில்பா ஒரு பாராட்டத் தகுந்த செயலை செய்துள்ளார். அதன்படி தனது மகளை பாளையங்கோட்டையில் உள்ள அரசு குழந்தைகள் மையத்தில் சேர்த்துள்ளார்.
ஆட்சியர் ஷில்பாவின் குழந்தைக்கு 3 வயதாகிறது. அவள் பெயர் கீது என்கிற கீதாஞ்சலி.
பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாகம் அருகே அமைந்துள்ள ஒரு அரசு குழந்தைகள் மையத்தில் தான் கீதுவை சேர்த்துள்ளார் ஷில்பா. ஒரு அங்கன்வாடி பள்ளியில் மகளை சேர்த்து படிக்க வைத்துள்ள ஆட்சியர் ஷில்பா மற்ற அரசு துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க ஆரம்பித்துள்ளார்.
ஆனால் இது எதை பற்றியும் அறியாத கீதுவோ மற்ற மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடங்களை கவனமுடன் கேட்டு வருகிறார்.