தமிழ் மண்ணின் ஆசிரியச் சொந்தங்களே!
ஆசிரியச் சொந்தங்களின் நலனுக்காக தன் வாழ்வின் அத்தனை சுகங்களையும் இழந்த தலைப்போராளி அண்ணண் ஜே.எஸ்.ஆர் அவர்களின் அன்புத் தம்பிகளே!
CPS ஒழிப்பு இயக்கம் என்ன செய்துவிடும் என்று பல பெரிய இயக்கங்களின் சில தலைமைகள் கேலியாக, கிண்டலாக அறைகூவல் விடுப்பதைக் காணமுடிகிறது.
CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் களை சோர்வடைய செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
2004 ல் நம்மை அதாவது ஆசிரியர்கள்,அரசூழியர்களை கல்விப் பிடித்தCPS என்ற கொடிய விஷப் பாம்பின் பிடியிலிருந்து தனி இயக்கமோ,ஒருங்கிணைந்த ஆசிரியர்,அரசூழியர் இயக்கங்களோ இதுவரை 16 ஆண்டுகளாக காப்பாற்ற இயலவில்லை.
ஜேக்டோ ஜியோ உயர் மட்ட குழு இதுவரை கூட்டப்படவில்லை.ஒருங்கிணைப்பாளர்களே வருடக்கணக்கில் முடிவெடுப்பதும் , செயல்படுவதும்,செயல்படாமல் இருப்பதும் ஏற்புடையதுதானா?
2017 போராட்டம் வெற்றியடைந்தது அனைத்து இயக்கங்களும் ஜேக்டோ ஜியோவில் இணைந்து போராடியதால் அல்ல.போராடாத இயக்கத்தின் உறுப்பினர்களும் கூட இயக்கத்தை மறந்து போராட்டக் களத்திற்கு வந்ததால்தான்.
தேர்தல் நெருங்கிவிட்டது.இயக்கங்கள் ஒருங்கிணைய முடியவில்லை.ஒருங்கிணைந்த இயக்கங்கள் ஒருமித்த கருத்துக்கு வரமுடியவில்லை.
CPS பாதிப்பில் இருக்கும் அப்பாவி ஆசிரியர்கள் , ஊதிய பாதிப்பில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களிடம் பழைய கதைகளை கதைப்பதால் பயன் என்ன? இன்றைக்கு எந்த தனிச்சங்கமும் எதையும் சாதித்திட முடியாது.
கொரானா காலத்திலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் தொடங்கிவிட்டார்கள்.
16 வருடம் எவ்வித முன்னேற்றமும் காணாமல் இருக்கும்CPS பிரச்சினை யில் ஆசிரியர்கள் அதற்காகவே ஒருங்கிணவது காலத்தின் கட்டாயம்.தவிர்க்க இயலாதது.ஆசிரியர்கள் நலனுக்காக இயக்கம் நடத்துபவர்கள் ஆதரவை தருவதுதான் சரி.இல்லையென்றாலும் ஆசிரியர்கள் இயக்க கட்டுப்பாட்டை மீறி கலந்து கொள்வார்கள்.ஏனெனில் அது அவர்களின் சொந்த நலனுக்கான போர்.
சுய நலத் தலைவர்கள்,சுய கௌரவத்திற்காக இயக்க உறுப்பினர்கள் நலனை அடகு வெய்க்கும் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த கட்சி நலனுக்காக முடிவெடுக்கும் தலைவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டே உள்ளார்கள்.
இப்போதும் கிடைக்கும் வாய்ப்பை தவறவிட அவர்கள் தயாராக இல்லை.
அதை விரைவில் தமிழகம் காணும்.
CPS ஒழிப்பு இயக்கம் செயல்பாடுகள் வெற்றி பெறும்.
டே.குன்வர் சோசுவா வளவன்.
மாநில தலைவர்.
ஜே.எஸ்.ஆர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
திங்கள், 7 டிசம்பர், 2020
Home »
» CPS ஒழிப்பு குழு என்ன செய்யும்
0 comments:
கருத்துரையிடுக