இயக்க நிலைப்பாடும்.வேண்டுகோளும்!
59 வயது வரை அரசூழியர், ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு என்ற அரசாணை என் 51 பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறை நாள் 07/05/2020 வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை இயக்கங்கள் அல்லது ஆசிரியர்,அரசூழியர் கோரிக்கை மீது வழங்கப்பட்டது அல்ல.
இது நிதி நிலையை கருத்தில் கொண்டு அல்லது தற்போது 2020-2021 ல் ஓய்வு பெறுபவர் ஓய்வூதிய பலன்களை வழங்க மனமின்றி எடுக்கப்பட்ட முடிவு.
இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பை பறித்து இளைஞர்கள் வாழ்வை சீரழித்துவிடுமா? என்றால் இல்லை.
ஏற்கனவே புதிய வேலை வாய்ப்புகளை பறிக்கும் அரசாணைகள் ஒப்பந்த அடிப்படையில் நியமன அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும்,போராட்ட காலத்தில் நம் வேலையை பறித்து ஒப்பந்த ஆசிரியர் நியமனம் செய்ய அரசு முடிவு செய்த போது லட்சக்கணக்கில் விண்ணப்பித்த சமூகம் இது.
அவர்களுக்கு முறையாக பணியளிக்க வேண்டும் என்றே போராடினோம்.
சமூகத்தைப் பற்றி கவலைப்படும் நேரத்தில் சக பணியாளர்கள் பற்றியும் கவலப்பட வேண்டும்.தற்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் பற்றி கவலைப்படாமல் அவர்கள் கருத்து அறியாமல் பொத்தாம் பொதுவாக கருத்து கூற நம் இயக்கம் விரும்பவில்லை.
இந்த அரசாணை வேண்டாம் என்று கூறுவது அடுத்து வரும் அரசுக்கும் நாம் கூறுவதுபோல் ஆகிவிடும்.
ஆதரிப்பது இந்த நிலையில் அரசு நம் நன்மைக்காக அரசாணை வெளிட்டது என்பதாக ஆகிவிடும்.எனவே , வீண் விவாதம் ஆக்காமல் மௌனமாக கடந்து செல்வதே சரி என இயக்கம் கருதுகிறது.
எனவே, ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கம் சக இயக்க தலைமைகள்,ஜேக்டோ -ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பு இயக்கங்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோரை அன்போடு கேட்டுக் கொள்வது இந்த அரசாணை விளம்பரப் படுத்தவோ இது குறித்து பேட்டிகள் ஊடகங்களில் பேட்டியளிக்கவோ வேண்டாம் மறுபரிசீலனை செய்யுங்கள்!!இதுவே இன்றைய கொரானா நெருக்கடி நிலையில் நல்லது.
இவண்,
மாநில அமைப்பு.
டே.குன்வர் சோசுவா வளவன்
மாநில தலைவர்
சி.ஜெகந்நாதன்
பொதுச்செயலாளர்.
வை.பொய்யாமொழி
மாநில பொருளாளர்.
ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி.