நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 8 டிசம்பர், 2018

ஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு._அனைவருக்கும் பகிரவும்


ஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.


ஜவ்வாது மலை வனத்துறை பள்ளியில் காலியாக உள்ள 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு


 திருப்பத்தூா் வனக்கோட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள வனத்துறை பள்ளிகளில் 8 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன
இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஜவ்வாது மலையில் தங்கி மாணவா்களுக்கு கல்வி கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்களை திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, அதைப் பூா்த்தி செய்து மாவட்ட வன அலுவலா், திருப்பத்தூா் கோட்டம், அரசு தோட்டம், திருப்பத்தூா் - 635601 வேலூா் மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு முடித்தவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share:

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் குழப்பம்*





தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் குழப்பம்*


*🛑பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்களுக்கு, வழிகாட்டுதல் இல்லாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை காக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்*


*🛑தமிழகத்தில், 2017 - 18ம் கல்வியாண்டில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முறை அமலானது*


*🛑முதல் முறையாக, அத்தேர்வு எழுதிய, ஒன்பது லட்சம் பேரில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தோல்வியை தழுவினர். அவர்கள், பிளஸ் 2 படிக்கலாம் என அறிவிக்கப்பட்டது*


 *🛑ஜூனில் நடந்த சிறப்பு துணைத்தேர்வில், பிளஸ் 1 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், 20 சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறவில்லை*


 *🛑இந்நிலையில், 'பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள், உயர்கல்விக்கு எடுத்துக்கொள்ளப்படாது' என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்*


*🛑நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது*


 *🛑ஆனால், கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத பிளஸ் 1 மாணவர்கள், மீண்டும், அப்பாடங்களை எழுதி தேர்ச்சி பெறுவது குறித்து, எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை*


 *🛑வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வில், பங்கேற்க அனுமதிக்கப்படும்பட்சத்தில், தேர்வு கட்டணம், விண்ணப்பம் ஆகியவை பெறப்பட்டிருக்க வேண்டும். எதுவும் பெறாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்*


*🛑இதுகுறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது*


*🛑பிளஸ் 1 பொதுத்தேர்வில், அரசின் நிலைப்பாடு, ஆரம்பம் முதல், குழப்பத்திலேயே தொடர்கிறது. தேர்ச்சி பெற தவறியவர்கள், நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர்*


 *🛑ஆனால், பிளஸ் 1 தவறிய பாடங்களை, தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டுமா, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, பிளஸ் 1 தேர்ச்சி பெறாமல் இருப்பின், உயர்கல்வியில் சேர முடியுமா என்ற கேள்விகளுக்கு, கல்வித்துறை விளக்கம் அளிக்கவில்லை. இப்போதிருந்தே, தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும் தயாரானால் தான், மாணவர்களுக்கும் எளிதாக இருக்கும்*


 *🛑அதனால், பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்களை, கல்வித்துறை, உடனடியாக வெளியிட வேண்டும். அப்போது தான், மாணவர்களின் எதிர்காலம் பாழாவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்*



*SOURCE DINAMALAR WEBSITE*
Share:

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.ஜேக்டோ ஜியோ வழக்கு விசாரணையில் வெளியாகுமா?

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.ஜேக்டோ ஜியோ வழக்கு விசாரணையில் வெளியாகுமா?

Share:

வியாழன், 6 டிசம்பர், 2018

நிதியுதவி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை போலிBEO க்கு சிறை தண்டனை

அரசு நிதியுதவி பள்ளி மோசடிக்கு உடந்தையாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் கடந்த 2015ல் மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் அப்துல்ஹக் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடந்த 2012 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை போலியாக  கணக்கில் காட்டி, தலைமை ஆசிரியர் அரசு நிதியுதவி பெற்று  மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது

விசாரணையில், வாலாஜா கிழக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூங்கோதை(47) இதற்கு உடந்தையாக  இருந்ததும் ெதரிந்தது. புகாரின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2015 ஆகஸ்ட் 27ல் வழக்குப்பதிவு செய்தனர்.



இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரி விசாரித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதைக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். 
Share:

SBI Zero Balance Account: அந்த 3 திட்டங்கள் என்னென்ன தெரிந்துக் கொள்வோமா?


SBI Zero Balance Account: அந்த 3 திட்டங்கள் என்னென்ன தெரிந்துக் கொள்வோமா?

1. சேலரி அக்கவுண்ட் :
நீங்கள் பணிப்புரியும் அலுவலகத்தில் மாத சம்பளம் வழங்க தொடங்கப்படும்  சேலரி அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை கிடையாது. மேலும், இலவச ஆன்லைன் பேங்கிங், ஏ.டி.எம் கார்ட், ஜாயின்ட் அக்கவுன்ட்டுக்கு கூடுதல் ஏ.டி.எம் கார்டு, எஸ்.பி.ஐ பவர் வசதி, இலவச கசோலைகள் வழங்கப்படும்.
தொடர்ந்து 3 மாதங்கள் ஊதியம் கணக்கில் டெபாசிட் ஆகவில்லை என்றால், இந்த கணக்குக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் திரும்பப் பெறப்படும்.
2. பேசிக் சேமிப்பு கணக்கு:
ஏழை மக்கள் பயன்பெற தொடங்கப்பட்ட கணக்கு பேசிக் சேமிப்பு கணக்கு ஆகும். இதில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ள நீங்கள் கே.ஒய்.சி சான்றுகளை வழங்க வேண்டும். இந்த கணக்கை தொடங்குவோருக்கு இலவசமாக ரூ-பே ஏ.டி.எம் கார்டு வழங்கப்படும்.  NEFT/RTGS சேவை மூலம் கட்டணம் இன்றி பணம் அனுப்பவும் பெறவும் முடியும். மினிமம் பேலன்ஸ் பிரச்சனை அறவே இல்லை
இந்த கணக்கு திறக்க நினைப்பவர்களுக்கு, வேறு சேமிப்பு கணக்குகள் இருக்கக் கூடாது. அப்படியே இருந்தால் 30 நாட்களுக்குள் அதை மூட வேண்டும்.
3. சிறிய டெபாசிட் கணக்குகள்:
கே.ஒய்.சி சான்றுகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த கணக்கை தொடங்கலாம். ஆனால் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கே.ஒய்.சி சான்றுகள் சமர்ப்பித்த பிறகு பேசிக் சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் தான்ன். ஆனால் அதிகபட்சமாக 50 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
Share:

செவ்வாய், 4 டிசம்பர், 2018

எஸ்பிஐ வங்கி சலுகைகள்

எஸ்பிஐ சலுகைகள்:

1. வீட்டுக்கடன்:

எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு 8.30 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. இதில் பெண்களுக்கு அதிகச் சலுகைகள் உண்டு.
ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றால் குறைந்தபட்சம் 855 முதல் 847 ரூபாய் தவணையில் கடனை அடைக்கலாம். கடன் பெறும் தொகையில் 0.35% அல்லது 10,000 ரூபாயுடன் ஜிஎஸ்டி 18 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 2000 ரூபாய் உடன் ஜிஎஸ்டி செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கும்.

2. பெர்சனல் லோன்:

எஸ்பிஐ வங்கி வழங்கும் இந்தக் கடன் பேக்கேஜ் ஆனது 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் கடன் அளிக்கும். 2 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாகக் கடன் பெறும் போது 0.5 சதவீதத்தை வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படும். என்ன தொழிலிற்காகக் கடன் பெறுகிறார்கள் என்பதைப் பொருத்துச் சலுகைகள் மாறும்.

3. பிக்சட் டெபாசிட் :

3. 1 கோடிக்கும் கீழ் எஸ்பிஐ வங்கியில்  பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு சென்ற வாரம் .05 முதல் 0.10 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

4. சிறிய டெபாசிட் கணக்குகள்:

கே.ஒய்.சி சான்றுகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த கணக்கை தொடங்கலாம்.கே.ஒய்.சி சான்றுகள் சமர்ப்பித்த பிறகு பேசிக் சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் தான்ன். ஆனால் அதிகபட்சமாக 50 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

Share:

பான் கார்டுக்கு புதிய விதி மாற்றங்கள்!

பான் கார்டு என்றால் பலரும் பயந்து பின்வாங்கும் நிலை போய், இப்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது. பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது. இப்போதும் முக்கிய மாற்றங்களை செய்துள்ளத. இந்த மாற்றங்கள் இன்று முதல்  அமலுக்கு வருகிறது. வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் 10 இலக்க எண் ெகாண்ட பான் கார்டை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிமாற்றம் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம். மேலும் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலே இப்போதெல்லாம் பான் கார்டு கேட்பது வழக்கமாகி விட்டது.

புதிய 5 விதிகள்
1 குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க  முடியும். அதுபோல,  குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டு வழங்கப்படும். இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், ேம மாதம் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதிக்கப்படாது.
2 நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், டிரஸ்டி, எழுத்தாளர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள் என்று பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
3 மொத்த விற்றுமுதல், விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இனங்களில் நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தாலும், பான் கார்டு முக்கியம்.
4 கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான்கார்டில் தந்தை பெயரை குறிப்பிட தேவையில்லை.
5 வங்கி கணக்கு துவக்கவோ, வருமான வரி ரிடர்ன் பூர்த்தி செய்யவோ பான் கார்டு எண் கட்டாயம்.


Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support