ஏமாந்த பின்னும் இட்டுக்கட்டாமல்,இனியாவது போராட்டக்களம்தான் சரியென போனவர்களும் களம் வாருங்கள்.நாங்கதான் தலையென்ற ஆதிக்க மனப்பான்மை விட்டு, பெரியண்ணன் போக்கை விட்டு ஆசிரியர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை நிறைய எதிரில் உள்ளது காணுங்கள்.ஊதிய முரண் ஒழிப்பு அறிவிப்பு வரவில்லை.ஊதிய நிலுவை அறிவிப்பு வரவில்லை.பங்களிப்பு ஓய்வூதியம் குறித்து வாய்திறப்பே இல்லை.எதுவரினும் களம் காண்போம்.வெல்வோம்
டே.குன்வர்.
மாநில தலைவர்.
ஜே.எஸ்.ஆர்..தொ.ப.ஆ.கூட்டணி.
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
வியாழன், 12 அக்டோபர், 2017
ஏமாற்றம் மாற்றம் தருமா?
எட்டாவது இடைநிலை ஆசிரியருக்கு எட்டாக்கனி ஊதியக்குழு!
இடைநிலை ஆசிரியரை வஞ்சித்து மறுபடி ஊதியக்குழு அரங்கேற்றம் நடந்திருக்கிறது. ஆசிரியர் சமுதாய அவலமாக இதைப் பார்க்க வேண்டியுள்ள நிலை!இந்நிலை முறியடிப்பு செய்ய எழுச்சியான வலிமைமிக்க போராட்டம் தேவை!ஜேக்டோ ஜியோ இத்தேவையை உணர்ந்து போராட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஞாயிறு, 1 அக்டோபர், 2017
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015
பெங்களூரு அருகே ஆசிரியருக்கு கோயில் கட்டி வணங்கும் கிராமம்!
வெள்ளி, 4 செப்டம்பர், 2015
05-09-2015 செய்திகள்
*மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் "ஆசிரியர் தின" வாழ்த்துச் செய்தி
*தொடக்கக்கல்வி - செப்டம்பர் 1 முதல் 7 தேதி வரை"ஊட்டச்சத்து வாரம்" கொண்டாட இயக்குனர் உத்தரவு
*சிறையில் ஆசிரியர் பணியிடம் செப்., 18ல் நேர்காணல்
*ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி
*ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளம் தர ஐ.டி., நிறுவனங்கள் தயார்
*பள்ளிக்கல்வி :2015/2016 ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான தேசிய விருதுகள் - தகுதிஉள்ள பரிந்துரைகள் வரவேற்று இயக்குனர் செயல்முறைகள் - கடைசி தேதி 30.09.2015
*டாக்டர் ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடுகிறார் மோடி
*ஆசிரியர்களின் நிலையை உயர்த்த உறுதியேற்போம்: ராமதாஸ்
*கல்விக் கடன் வட்டி மானியத்தில் முடங்கிக் கிடக்கும் ரூ.2,426 கோடி : ஒன்றரை ஆண்டாக பயன்படுத்தாமல் உள்ள வங்கிகள்
*மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு
*புகாரில் சிக்கினால் இடமாறுதல் இல்லை:
*ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு நிபந்தனை
*ஆசிரியர்தின சிறப்பு பதிவு- 11 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த தாயுள்ளம்!
*புதிய தலைமுறை "ஆசிரியர் விருது"
*தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில் 189 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்; அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
*ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் வரை நீட்டிப்பு
*தில்லி பள்ளியில் ஒரு நாள் ஆசிரியராகும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி: தொலைக்காட்சிகளில் இன்று நேரடி ஒளிபரப்பு
*நீதிமன்றங்களில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
*திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி.படிப்புகள் அறிமுகம்
*பி.எட்.: முதல் நாளில் 3 ஆயிரத்தை தாண்டியது விண்ணப்ப விநியோகம்
*இன்று எட்டாம் வகுப்பு 'ரிசல்ட்'
ஆசிரியர் தினம்(TEACHERS DAY)
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
💐ஆசிரியர் தின வரலாறு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.
💐ஆசிரியர் பணி என்றால் என்ன?
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
ஆசிரியர் தினம்
தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
💐
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.
ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.
வியாழன், 3 செப்டம்பர், 2015
04-09-2015 செய்திகள்
*புவியல் முதுகலை பட்டதாரி ஆசரியர்களுக்கு "திறன் வளர் பயிற்சி "(CONTENT ENRICHMENT TRAINING ) - இயக்குனர் செயல்முறைகள்
*போட்டித் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் -விரைவில் அறிவிப்பு
*BRTE Mutual Transfer : ஆசிரியப்பயிற்றுனர்கள் மனமொத்த மாறுதல் தேதி அறிவிப்பு...
*கல்வி மானியக் கோரிக்கை ஆசிரியர்களுக்கு ஏமாற்றம்...
*Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?
*புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள்; ரூ.6,000 கோடி வங்கிக்கடன்:பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
*ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு: பகுதிநேர கலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படும் - அமைச்சர் வீரமணி தகவல்
*மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில்இடஒதுக்கீடு கோரி வழக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
*வருகிறது பாடத்திட்டத்தில் மாற்றம்
*499 தொடக்க பள்ளிகள் புதிதாக துவக்க திட்டம்.
*பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு- அமைச்சசர் அறிவிப்பு
*TNPSC : பொதுப்பணி இன்ஜி., பணிக்கு தேர்வு பட்டியல் வெளியீடு
*மாணவர்களுக்கு இலவச வாய்ப்பாடு புத்தகம்.
*போராட்டத்தில் பங்கேற்ற பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை திரட்டும் அரசு
*Vijaya Bank Recruitment for 36 Probationary Managers Posts 2015
*பிஎட் மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்
*பள்ளிகளில் நன்னெறி கல்வி: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
*TNPSC : நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தேர்வுக்குஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
*1,078 எஸ்ஐகளை தேர்வு செய்ய இன்று முதல் நேர்முகத் தேர்வு
*அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கட்டாயம்'
*கேட்' தேர்வு தேதி அறிவிப்பு"
*ஜேம்' 2016: விண்ணப்பிக்க அக்.14 கடைசி
📚📚📚📚📚📚📚📚📚










