நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஒலி ஒத்த சொற்கள்

😇😇👌👌

தமிழுக்கும் ஆங்கலத்திற்கும் உள்ள ஒலி ஒத்த சொற்கள். படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் பிரமிப்பு ஏற்படுவது உறுதி.

Cash - காசு
Name - நாமம்
Vomit - ஒமட்டு
Ginger - இஞ்சிவேர்
Victory - வெற்றி
Win - வெல்/வென்று

Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Knowledge / Know - ஞானம் / காண்
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)

பின்வரும் வார்தையில S எடுத்திட்டு பாத்தா, அப்படியே தமிழ் சாயல்.

Script - குறிப்பு
Speech - பேச்சு
Speed - பீடு
Sponge - பஞ்சு
Snake - நாகம்

Molecule - மூலக்கூறு
Orate - உரையாற்று
Kill - கொல்
One - ஒன்று
Eight - எட்டு

Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்

Venom - விஷம்
Fade - வாடு
Poly- பல
Culprit - கள்வன்
Mega - மிக

Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி
Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)

Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Mind - மதி
Surround - சுற்றம்
Water - ஊற்று

Lemon - இளமஞ்சள்காய் (எலுமிச்சை)
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Roll - உருள்
Want - வேண்டி
Plough - உழவு

Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Round - உருண்டை
Villa - இல்லம்
Path - பாதை

Via/Way - வழியாக
Bottle - புட்டில்
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Attack - தாக்கு
Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)

Right - உரியது
Make - ஆக்கம்
Grain - குருணை
Button - பொத்தான்

Share:

ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள்,ஊக்க ஊதிய உயர்வு?பதவி உயர்வு உண்டா?இயக்குநரகம் பதில்.

ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கல்வித்தகுதிகள்,ஊக்க ஊதிய உயர்வு?பதவி உயர்வு உண்டா?இயக்குநரகம் பதில்.

Share:

இந்திய தேசியக்கொடியை தயாரிக்கும் ஒரே இடம் எது தெரியுமா?


இந்திய தேசியக்கொடியை தயாரிக்கும் ஒரே இடம் எது தெரியுமா?
நாளை இந்திய நாடே கோலாகலமாக கொண்டாட இருக்கும் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடெங்கும் மக்கள் நம் தேசியக் கோடியை ஏற்றுவதும், சிறிய வடிவ கொடியை சட்டையில் குத்திக்கொண்டும் வலம் வருவார்கள். வீதியெங்கும் இந்திய கொடி விற்கப்படும் இந்நேரத்தில், மூவர்ண இந்திய கொடியை தயாரிக்கும் ஒரே இடத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஆம், இந்திய தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாக நம் நாட்டில் தயாரிக்கும் ஒரே ஒரு ஃபாக்டரி மட்டுமே உள்ளது. அது கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பெங்கேரி என்ற கிராமத்தில் உள்ள ’கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கா’ (KKGSS) என்ற இடத்தில் அமைத்துள்ள தொழிற்சாலையில் மட்டுமே இந்திய கொடிகள் உற்பத்தி ஆகிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்திய நாட்டின் பாரம்பரிய சின்னமான மூவர்ணக் கொடியை தயாரிப்பதில் தங்களின் வாழ்நாளை அளித்துள்ளனர். இப்பெண்கள் சாதி, மத பேதமின்றி ஒரே சிந்தனையுடன், நாட்டின் மீதான பற்றுடன் இப்பணியை பல வருடங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

 ’கர்நாடக காதி கிராமோத்யோக் சம்யுக்த சங்கா’ பின்னணி

KKGSS நவம்பர் மாதம் 1-ம் தேதி, 1957ல் காந்திய சிந்தனை கொண்ட ஒரு குழுவால் தொடங்கப்பட்ட அமைப்பு ஆகும். இங்கு காதி மற்றும் கிராம தொழிற்சாலைகளின் உற்பத்திகள் செய்யப்பட்டன. வெங்கடேஷ் டி மகடி மற்றும் ஸ்ரீரங்கா காமத் ஆகியோர் முதல் தலைவர் மற்றும் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

பின்னர் இந்த அமைப்பு, கர்நாடகாவில் உள்ள 58 அமைப்புகளுடன் இணைந்து KKGSS மற்றும் அதற்கான ஒரு கூட்டமைப்பை ஹூப்ளியை தலைமியிடமாகக் கொண்டு தொடங்கியது. தலைமை அலுவலகம் 17 ஏக்கர் நிலப்பரப்ப்பளவில் ஒரு உற்பத்தி ஆலை, துணி உற்பத்தி குறித்தான கல்லூரியுடன் இயங்குகிறது.

1982-ல் இருந்து காதி உற்பத்தியை இந்த ஆலை செய்து வந்தாலும், நாட்டின் தேசியக் கொடி உற்பத்தி 2004ல் தொடங்கியது.

KKGSS-ன் நிறுவனர்கள், தேசியக்கொடி தயாரிப்பு, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அதிகம் வாழும் இடமான அங்கு, நடைப்பெற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

“அதன் படி, இன்று சுமார் 100 பின்னலாடை மற்றும் நெசவுத்தொழில் செய்யும் வல்லுனர்கள் இந்திய தேசியக்கொடியை அங்கே உற்பத்தி செய்கின்றனர்,” என்று KKGSSன் மேலாளர் நாகவேனி கால்வாட் தெரிவித்தார். 

10,500 ரூபாய் முதலீட்டில் தொடக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு, தற்போது ஒரு ஆண்டுக்கு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தேசியக்கொடிகளை தயாரிக்கின்றது.

 தேசியக் கொடி ஏன் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தயாரிக்கப்படுகிறது?

நாட்டில் KKGSS மட்டுமே இந்திய தேசயக் கொடிகளை உற்பத்தி செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஒரே இடம். பியூரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) அமைப்பின் படி, சரியான அளவில், சரியான வடிவில் தேசியக்கொடியை இவர்கள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும்.

ஜீன்ஸ் துணியை விட அதிக அடர்த்தியான ஒருவகை துணியில் மட்டுமே கொடிகளை இம்மையம் தயாரிக்கிறது. இவர்களது நெசவுப்பிரிவு பகல்கோட்டில் உள்ளது. மூன்று லாட்களில் கொடிகள், மூவர்ணத்தில் ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக டை செய்யும். பின்னர் துணி சரியான அளவில், வடிவில் வெட்டப்பட்டு, நடுவில் நீல நிறத்தில் அசோக சக்கரம் அச்சடிக்கப்படும். கடைசியாக மூன்று வர்ண துணிகள் சேர்த்து தைக்கப்பட்டு ஒரே இந்திய கொடியாக தயாரிக்கப்படும்.

KKGSS-ல் 60 தையல் மெஷின்கள் உள்ளது. ஒரே மாதிரியாக இங்கே தைக்கப்படும். ஒவ்வொரு துணியும், 18 முறையான தரக்கண்காணிப்புக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படும். கொடியின் அகலமும், நீளமும், சரியாக 2:3 என்ற அடிப்படையில், இருப்பக்கமும் நீல நிற சக்கரம் அச்சிடப்படும்.

BIS ஒவ்வொரு லாட்டையும் சரிபார்த்த பின்னரே ஒப்புதல் அளிக்கிறது. ஒரு சிறிய தவறு இருப்பினும் அந்த கொடி அடங்கிய லாட் நிராகரிக்கப்படும். ஆனால் இத்தனை கடுமையான முறைகள் இருந்தும், ஆண்டில் 10 சதவீதம் மட்டுமே நிராகரிக்கப்படுகிறது.

தேசியக்கொடி 9 அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. சிறியது 6×4 இன்ச்களிலும், பெரியது 21X14 அடியிலும் செய்யப்படுகிறது. கடுமையான கண்காணிப்பு இருப்பதால், கொடி உற்பத்தியில் இருக்கும் அதே குழுவினர் பல ஆண்டுகளாக அதே பணியை செய்து வருகின்றனர்.

”புதிதாக சேரும் ஊழியர்களுக்கு இந்த கடுமையான சட்டத்திட்டங்களை பின்பற்றுவது கஷ்டமாக உள்ளது. அதனால் அவர்கள் இங்கு நிலைத்து இருப்பதில்லை,” என்கிறார் அங்கே 10 ஆண்டுகளாக பணிபுரியும் நிர்மலா.

நிர்மலா போன்றோருக்கு இது ஒரு வேலை மட்டுமல்ல, நாட்டிற்கு செய்யும் நற்பணியாகவே அவர்கள் கருதுகின்றனர். அதைப்பற்றி அவர்களுக்கு பெருமிதமும் இருக்கிறது. மேலும் தாங்கள் வாழ்நாள் முழுதும் இதை செய்ய விருப்பப்படுகின்றனர்.

அரசு கட்டிடங்கள், மேற்கூரைகள், வாகனங்கள், மைதானங்கள், என்று நாடெங்கும் நீங்கள் காணும் இந்திய தேசியக்கொடி இந்த இடத்தில் இருந்து தான் தயாரிக்கப்படுகின்றது.

”இங்கே பணிபுரியும் நாங்கள் எல்லாரும் வெவ்வேறு சாதி, மதத்தை சேர்ந்தவர்கள். ஆனால், இந்த மையத்தினுள் நுழைந்தவுடன் எங்கள் ஒரே எண்ணம் இந்திய தேசியக்கொடியை சரியான படி தயாரிப்பதே. ஒற்றுமையுடன் நாங்கள் எங்கள் கடமையை செவ்வனே செய்கின்றோம்,” என்ற ஒருமித்த குரலில் அங்குள்ள ஊழியர்கள் கூறி மகிழ்ந்தனர்.




Share:

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

600 VAO பணியிடங்கள்

⚡   
        

*🔴🔵🌐600 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை*

*🌐தமிழகத்தில் காலியாகவுள்ள 600-க்கும் அதிகமான கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது*

*🌐இந்த இடங்கள் கிராம உதவியாளர்களைக் கொண்டு தகுதி அடிப்படையில் பதவி உயர்வின் மூலமும், கருணை அடிப்படையில் நியமனம் செய்யவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது*

*🌐தமிழகத்தில் 10,000-த்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன*

*🌐பெரும்பாலான இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள், பதவி உயர்வு, கருணை அடிப்படையில் நிரப்பப்படுகின்றன*

*609 இடங்கள்*🔵🔵

*🌐2017-18-ஆம் ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலிப் பணியிட மதிப்பீட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது*

*🌐இந்த மதிப்பீட்டின்படி, 609 காலியிடங்கள் உள்ளன. அதில், 341 காலியிடங்கள் கருணை அடிப்படையிலும், 268 இடங்கள் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிப்பதன் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்கிற விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையரகம் வெளியிட்டுள்ளது*

*🌐அதன்படி, தஞ்சாவூரில் அதிகபட்சமாக கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டிய காலியிடங்களின் எண்ணிக்கை 34 -ஆகவும், பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டியவை 27-ஆகவும் உள்ளன. இதேபோன்று, விழுப்புரம், காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகளவு காலியிடங்கள் உள்ளன*

*🔵🔵கிராம உதவியாளர்களுக்கு வாய்ப்பு*

*🌐கிராமப்புறங்களில் நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாளர்களாக பணியாற்றுவர்களே கிராம உதவியாளர்கள். அவர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட பணிச் சலுகைகள் மிகவும் குறைவாகும்*

*🌐அவர்களில் குறிப்பிட்ட அளவினர், பதவி உயர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்களாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது*

*🌐மாவட்ட அளவிலேயே இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகளை பூர்த்தி செய்யும்படி வருவாய் நிர்வாக ஆணையரகம் கேட்டுக் கொண்டுள்ளது*

➖➖➖➖➖➖➖➖➖➖

        *

Share:

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

CPS ACCOUNT STATEMENT

*CPS செய்தி..*
*2017 -2018 ம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT வெளியிடப்பட்டுள்ளது...*
*கீழ்கண்ட இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்*
http://cps.tn.gov.in/public/index.phphttp://cps.tn.gov.in/public/index.php
Share:

குறைந்த எண்ணிக்கை மாணவர்கள் உள்ள பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பு தொடக்கம்.

குறைந்த எண்ணிக்கை மாணவர்கள் உள்ள பள்ளிகள் அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பு தொடக்கம்.
Share:

புதன், 15 ஆகஸ்ட், 2018

மூட்டை தூக்கிய கலெக்டர்!

மூட்டை தூக்கிய கலெக்டர்!
Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support