நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

சனி, 25 ஆகஸ்ட், 2018

TRB_TET_TNPSC

#TRB_TET_TNPSC

12 வகுப்பு தமிழ் பாடத்தில் முக்கிய
வினாக்கள்

1. சிற்றன்னை என்பதன் பொருள் :கையேயி

2. பதி என்பதன் பொருள் : ஊர்

3. மாயவன் பொருள் :திருமால்

4. பலவகை வண்ணமும் மனமும் நிறைந்த
மலர்கள் தொடுப்பது :கதம்பம்

5. கதம்பம் என்பது கலம்பகமாக திரிந்தது
என சொன்னது : உ வே சா

6. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் :நந்தி
கலம்பாகம்

7. முக்கூடர் பள்ளு எந்த இறைவன் மீது
பாடப்பட்டது :அழகர்

8. சைவ வைணவங்களை இணைக்கும் நூல் :
முக்கூடர்பள்ளு

9. பாஞ்சாலி சபதம் எத்தனை சறுக்கம்
கொண்டது :மூன்று

10. கலைமகள் பொருள் :பாரதி

11. இருபதாம் நூற்றண்டின் இலக்கிய
மறுமலர்ச்சி வித்திட்டது யார் :பாரதி

12. யாம் அறிந்த மொழிகளில் சிறந்த மொழி
தமிழ் என சொன்னவர் :பாரதி

13. வானிதாசன் பிறந்த ஊர் :வில்லியனுர்

14. தமிழ் பிரஞ்சு கையகர முதலி
வெளியிட்டவர் : வானிதாசன்

15. செவாலியர் விருது பெற்றவர் :
வானிதாசன்

16. இமயம் எங்கள் காலடியில் என்னும்
நூலை எழுதியது :மோகணரங்கள்

17. தாராபாரதி எழுதிய நூல் :புதிய
விடியல்

18. மரபு கவிதையின் வேர் பார்த்தவர்
:அப்துல் ரகுமான்

19. தண்டமில் ஆசான் :சீத்தலைச் சத்தணார்

20. ரட்சனியம் பொருள் :ஆன்ம ஈடேர்ரம்

21. காசினி பொருள் :உலகம்

22. தொல்காப்பிம் : 3 அதிகாரம் 27 இயல்கள்
1610 நூற்பா

23. சிலப்பதிகாரம் காண்டம் 30 காதை 5001
வரி

24. மணிமேகலை :30 காதை 4755 வரி

25. தேம்பாவனி காண்டம் 36படலம் 3615
பாடல்

26. கம்பராமாயணம் :6 காண்டம் 118 படலம் 10589
பாடல்

27. சீவக சிந்தாமணி : 13 இலம்பகம் 3145 பாடல்

28. ராவண காவியம் :5 காண்டம் 57 படலம் 3100
விருத்தம்

29. பெரிய புராணம் :2 காண்டம் 13 சறுக்கம்
4286 பாடல்

30. ஏசுகாவியம் :149 அதிகாரம் 810 விருத்தம்
2346 அகவடி

Share:

உண்ணும் உணவுகளின் தமிழ் பட்டியல்.#

#உண்ணும் உணவுகளின் தமிழ்
பட்டியல்.#

சப்பாத்தி----------------கோந்தடை
புரோட்டா---------------புரியடை
நூடுஸ்-------------------குழைமா
கிச்சடி------------------காய்சோறு,
காய்மா
கேக்--------------------கட்டிகை,
கடினி
சமோசா----------------கறிப்பொதி,
முறுகி
பாயசம்-----------------பாற்கன்னல்
சாம்பார்--------------
பருப்புக்குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி-----------------தோய்ச்சி,
மாவேச்சி
பொறை----------------வறக்கை
கேசரி----------------செழும்பம்,
பழும்பம்
குருமா----------------கூட்டாளம்
ஐஸ்கிரீம்----------------பனிக்குழம்பு
சோடா------------------காலகம்
டீ------------------------தேநீர்
சட்னி--------------------அரைப்பம்,
துவையல்
கூல்ட்ரிங்க்ஸ்----------குளிர்
குடிப்பு
பிஸ்கட்----------------ஈரட்டி,
மாச்சில்
போண்டா--------------உழுந்தை
சர்பத்------------------நறுமட்டு
சோமாஸ்---------------பிறைமடி
பன்--------------------மெதுவன்
ரோஸ்ட்----------------முறுவல்
லட்டு--------------------கோளினி
ஃப்ரூட் சாலட்---------பழக்கூட்டு
ஜாங்கிரி----------------முறுக்கினி
ரோஸ் மில்க்-----------முளரிப்பால்
காபி--------------------குழம்பி

Share:

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

புதிய பென்சன் திட்ட பணம்? இன்றைய செய்தி-ஏங்கெல்ஸ்

புதிய பென்சன் திட்ட பணம்? இன்றைய செய்தி.-ஏங்கெல்ஸ்
Share:

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

தினமணியின் தலையங்கம்...

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

நன்றி : தினமணி

Share:

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

தமிழ் எண்கள்.மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது.

----------------------------
*#தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழகத்தில் தமிழர்களே இல்லை..
----------------------------
Share:

உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக ஆங்கிலேயனை அலறவிட்ட குயிலி!

உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக ஆங்கிலேயனை அலறவிட்ட குயிலி

ஆங்கிலேயரை கதிகலங்கச்செய்த‌ “தியாக வீரத்திருமகள் குயிலி”– மறைக்க‍ப்பட்ட‍ வரலாற்றுநாயகி

சிவகங்கையில் அத்துமீறி உள்நுழைந்த ஆங்கிலேய படைகளுடன், மருது சகோதரர்களின் துணையுடன்

வீரமங்கை வேலுநாச்சியார் போர் புரிந்துகொண்டிருந்தார். அந்த போரில் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலு நாச்சியார் மற்றும் மருது சகோத்த‍ரர்களின் படைகள் பக்க‍ம் தோல்வி உறுதியாகிக்கொண்டிருந்தது

அந்த நிலையில் அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தது.

அப்போது சட்டென ஒருஉருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தார்.

அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச்சிதற அந்த உருவ மும் வெடித்து சிதறியது ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

ஆங்கிலே யரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடி த்துச் சிதறிய அந்த உருவம்தான் “தியாக வீரத்திருமகள் குயிலி” இவரே உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக போற்ற‍ப்பட வேண்டியவர் .
Share:

ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதில் சிக்கல்!

ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதில் சிக்கல்!
Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support