நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

சனி, 15 ஆகஸ்ட், 2015

பணி நிரவல் ஒன்றித்திற்குள்ளேயே செய்துகொள்ளலாம்.- 10-08-2015 இயக்குனர் சந்திப்பு

ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் டே.குன்வர் சோஸ்வா வளவன் பொதுச்செயலர் ஜென்நாதன் மாநில பொருளாளர் வை.பொய்யாமொழி மாநில துணைச்செயலர் பொன்ராஜ் ஜான்சன் , தூத்துக்குடி மாவட்ட செயலர் ஸ்டீபன் , சிவகெங்கை மாவட்ட செயலர் செல்லப்பா , தலைவர் அருளானந்து , வேலூர் மாவட்ட செயலர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் கொடைக்கானல் ஆரோக்கியசாமி ஆகியோர் மாண்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அவர்களைச் 10.08.2015 அன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர் . மனுவை பரிசீலித்த இயக்குனர் கீழ்கண்ட உறுதிகளை அளித்திட்டார்
1.பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொண்டால் முழுசம்பளம் வழங்க ஆணை.
2.இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் சார்பு ஆணை .
3. விலையில்லா பொருட்களை பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடு.
4.காலநிலை , கடுங்குளிர் போன்ற பிரச்சனைகள் நிலவும் கொடைக்கானல் பள்ளிகளின் வேலை நேரம் மாற்றியமைத்தல் .
5.வேலூர் மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் உ.தொ.க.அலுவலத்தில் தேங்கியுள்ள 170பணப்பலன் சார்ந்த கோப்புகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு போன்ற உறுதி மொழிகளை அளித்திட்டார் . மேலும் இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை சார்ந்த போராட்டம் தொடர்பாக முடிவெடுக்க விரைவில் மாநில பொதுக்குழு திருச்சியில் கூடும் .
 -மாநில தலைவர்


Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support