ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு.அனந்தகுமார் அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம்! http://www.voiceofnews.webs.com/ தர்மபுரி கலெக்டராக இருந்த ஆனந்தகுமார், ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டார். மெட்ரிக் பள்ளியில் படித்த, அவரது மகள் கோபிகாவை, ஈரோடு பங்களா அருகே உள்ள, குமலன்குட்டை பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில், இரண்டாம் வகுப்பில் சேர்த்தார்."என் குழந்தை பள்ளியில் சத்துணவு சாப்பிடும்; அரசின் இலவச சீருடைகள் வழங்க வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியையிடம், கலெக்டர் கோரினார்.
ஆட்சியரின் செயல் ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளைப் பற்றிய பொதுமக்கள் எண்ணங்களை மாற்றியது மட்டுமல்ல, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தங்கள் பணியின் பொருட்டு பெருமை கொள்ளவும் செய்துவிட்டார். கொடைக்கானல் வட்டார தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அன்னாரைப் பாராட்டுவதில் பெருமை கொள்கிறது.
0 comments:
கருத்துரையிடுக