இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் தற்போதைய தேவை என்ன?
இயக்கம் போராடி பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்திய போதிலும் கடந்த, 2002 முதல் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.2003 ல் நிதித்துறை அரசாணை 259 நாள் 06/08/2003 இன் படி பங்கேற்பு ஓய்வூதியம் 01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது. 01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் தொகுப்பூதியத்திலேயே நியமிக்கப்பட்டனர்.சம்பளம் ரூ3000/மட்டும். தொகுப்பூதிய காலத்தை முறையான நியமன காலமாக மாற்ற நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்ற கட்டாய ஒப்பந்தம் வேறு.
இந்த நிலை, பள்ளிக்கல்வி அரசாணை 99 நாள்.27/06/2006 இன் படி ஒரே நாளில் மாற்றப்பட்டு அனைவருக்கும் உடனடி பணிவரன்முறை அதோடு இனி தொகுபூதியம் இல்லை என்று உத்திரவாதமும் வழங்கப்பட்டது.
ஆனாலும் , பின்னடைவு.எப்போது?,எப்படி?.ஆறாவது ஊதியக்குழு வந்த போதே பின்னடைவும் வந்துவிட்டது.இதுவரை எந்த ஊதியக்குழுவிலும் ஏற்படாத , முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஆறாவது ஊதியக்குழு வெளியானது.(தொடரும்)
குன்வர்
0 comments:
கருத்துரையிடுக