நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

அரசுப் பள்ளிகளைக் காப்போம் தினமணி நாளிதழ் கட்டுரை ஆசிரியர்கள் எண்ணங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.

அரசுப் பள்ளிகளைக் காப்போம் என்ற தலைப்பில் சி.சரவணன்.பொது நூலகத்துறை அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அவர்கள் தினமணி நாளிதழில் கட்டுரை எழுதியுள்ளார்.கட்டுரையாளரின் கருத்துக்கள் ஆசிரியர்களாலும்,ஆசிரியர் சங்கங்களாலும் எப்போதும் தெரிவிக்கப்படுபவை.செயல் வழிக்கல்வியின் குறைபாட்டை அரசுக்கு தெரிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கையெழுத்து இயக்கம் நடத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கையொப்பம் பெற்று அரசிடம் வழ்ங்கியுள்ளது.இருந்தாலும்,சம்பந்தப்பட்ட துறையினர் குறைகளை சுட்டிக்காட்டுவதை விட ,பிற துறையை சார்ந்தவர்கள் குறைகளை தெரிவிக்கும் போதும்,அது தினமணி போன்ற நாளிதழ்களில் வெளிவரும்போதும் கருத்துக்கள் வலுப்பெற்று அரசின் கவனத்தை ஈர்க்கும் முகமாக அமைகின்றன. தொடக்கக் கல்வித் துறையில் ஈராசிரியர் பள்ளிகள் நிலை, செயல் வழிக்கல்வி திட்டம் ஆசிரியர் மற்றும் மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்று கட்டுரையாளர் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். பயனற்ற பயிற்சிகளும் , புள்ளிவிவரங்கள் கேட்டு அடிக்கடி நடத்தப்படும் தலைமைஆசிரியர் கூட்டங்களும் பள்ளியை பாதிப்பது பற்றியும் விளக்கியுள்ளார். அன்னாரின் கட்டுரை ஒட்டு மொத்த ஆசிரியர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும் அரசுக்கு செயல் வழிக்கல்வியின் குறைபாட்டை உணர்த்துவதாகவும் உள்ளது.அன்னாருக்கு கொடைக்கானல் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
Share:

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support