குறைந்த பட்ச ஊதியம் ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!
குறைந்த பட்ச ஊதியம் (Minimum Wage )
1.1.2014 அன்று ஒரு மத்திய அரசு
ஊழியரின் குறைந்த பட்ச சம்பளம் 5200 + 1800
= 7000 ஆகும். அன்றைய தேதியில் அவர்
வாங்கியது 100 % D.A. எனவே, அதையும்
சேர்த்து அவரது சம்பளம் 14 ஆயிரம் ஆகும்.
இதைத்தான் ரூ. 26000/- ஆக்க Staff side
(JCM) கோரி உள்ளது.
1957 ம் ஆண்டு இந்திய தொழிலாளர் 15
வது மாநாடு குறைந்த பட்ச ஊதியம்
எப்படி கணக்கிட வேண்டும் என்றும்
வரையறுத்து உள்ளது. இது Dr. Aykroyd
formula எனப்படுகிறது. இதன்படியான
வரையறைகள்.
1. ஒரு தொழிலாளியின் ஊதியம் என்பது
கணவன், மனைவி, இரு குழந்தைகளுக்குத்
தேவையான கலோரியை ஈடுகட்ட
தேவையான பொருள்களின் விலையை
அடிப்படையாக கொண்டது.
2. ஒரு நாளைக்கு ஒருவர் இழக்கும்
கலோரி 2700 ஆகும்.
3. கணவனுக்கு ஒரு unit. மனைவிக்கு
0.8unit . இரு குழந்தைகளுக்கு each 0.6
unit. ஆக மொத்தம் 3 unit க்கு தேவையான
செலவைக் கணக்கிட வேண்டும்.
4. இந்த நால்வரும் சேர்ந்து ஒரு மாதத்தில்
பயன்படுத்தும் குறைந்த பட்ச
பொருள்களின் பட்டியல்.
Commodity Quantity
1 அரிசி/ கோதுமை 42.75 Kg
2. பருப்பு வகைகள் 7.20 Kg
3. காய்கறிகள் 9.00 Kg
4. கீரை வகைகள் 11.25 Kg
5. இதர காய்கறிகள் 6.75 Kg
6. பழங்கள் 10.80 Kg
7. பால் 18.00 litre
8. சர்க்கரை / வெல்லம் 5 Kg
9. சமையல் எண்ணெய் 3.6 Kg
10 மீன் 2.5 Kg
11 மாமிசம் 5 Kg
12 . முட்டை 90
13 soap 14
14 Clothes 5.5 metre
1.1.2014 அன்று இந்த பொருட்களின் விலை
என்ன என்று கணக்கிடப் பட்டதில் அது ரூ.
11344/-
5. இத்துடன் 20 % உள்ளிட்டவற்றுக்கு
சேர்க்க வேண்டும். அது ரூ. 3129/- என்று
கணக்கிட பட்டு உள்ளது.
6. 3rd Central Pay Commission
குடிஇருக்கும் வீட்டுக்காக (HRA) 7.5 %
சேர்த்தது.
7. ஆக மொத்தம் ரூ. 15647/-
8. Supreme court ஒரு தீர்ப்பில் இவற்றுடன் 25
சதம் மருத்துவ செலவுகளுக்கும் கல்வி
செலவுகளுக்கும் சேர்க்க கோரி உள்ளது.
அந்த அடிப்படையில் ரூ. 20861/- ஆகிறது.
இது unskilled employee க்கான கணக்காகும்.
ஆனால் இன்று மத்திய அரசில் அனைத்து
துறைகளிலும் குறைந்த பட்ச கல்வித்
தகுதி unskilled employee க்கே 10ஆம்
வகுப்பு என்று வந்து விட்டதால் மத்திய
அரசில் அனைவருக்கும் குறைந்த பட்ச
ஊதியமாக skilled employee சம்பளத்தை
நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி
உள்ளனர். அதற்கு unskilled employee
சம்பளமான ரூ. 20861/- உடன் 25% சேர்க்க
வேண்டும். அது ரூ. 5214/- அதை
சேர்த்தால் ரூ. 26075/- வருகிறது.
ஆகவே ரூ.26000/- த்தை Minimum wage
என்று நிர்ணயிக்க வேண்டும் என STAFF SIDE
(JCM) கோரி உள்ளனர்.
வியாழன், 3 செப்டம்பர், 2015
Home »
7th pay commission pay fixation
,
குறைந்த பட்ச ஊதியம்
» குறைந்த பட்ச ஊதியம் ஊதியக்குழுவில் எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது!
0 comments:
கருத்துரையிடுக