நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

வியாழன், 3 செப்டம்பர், 2015

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் விவரம்(TET)

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் முந்தைய விவரம் : தமிழ்நாடுஅரசு டி.ஆர்.பி மூலம் 2013ம் அண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி 90மதிப்பெண்களை பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக கருதி அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது, பின்னர் தமிழக அரசு கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் திடீரென்று 5சதவீத இடஒதுக்கீடும் வெயிட்டேஜ் என்னும் தகுதிகாண் முறையையும் அறிமுகப்படுத்தியது.
அதில் வெயிட்டேஜ் வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்தது, அதே சமயத்தில் திருநெல்வேலியை சார்ந்த வின்சென்ட் என்பவரால் தொடுக்கப்பட்ட வழக்கு வெற்றிபெற்று 5சதவீத மதிப்பெண் சலுகை கொடுத்தது தவறு என்று ரத்து செய்து உத்ததரவிட்டது ....
ஆசிரியர் தகுதித்தேர்வின் இன்றைய நிலை:
இன்று கோர்ட் நமபர் 9இல் 3ஆவது வழக்காக வந்தது ... ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகத்தினர் மற்றும் பலரால் தொடுக்கப்பட்ட வெய்ட்டேஜ் வழக்கும் அரசால் தொடுக்கப்பட்ட மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் 5 சதவீத மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது.. இன்று பல வழக்கறிஞர்கள் வராத நிலையிலும் நமது வழக்கறிஞர் திரு இராஜாஇராமன் அவர்கள் ஆஜராகி இருந்தார்..
இவ்வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற எதிர்மனுதாரர் (5 சதவீத ரத்து உத்தரவு வாங்கியவர் ) வின்சென்ட் அவரது பதிலையும் வாங்கும் பொருட்டு அவருக்கு தனியாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்...
என்.சி.டி.இ-யையும் ஒரு மனுதாராக சேர்க்க கோரிக்கை :
ஆசிரியர் தகுதிததேர்வு என்பது என்.சி.டி.யின் விதிமுறையின் படியும் ஆலோசனையின் படியும் நடத்தப்படுகிறது ஆகவே இந்த வழக்கில் என்.சி.டி.யும் ஒரு மனுதாரராக சேர்க்கவும் கோரிக்கை செய்தனர்..
என்.சி.டி.இ.யை ஆலோசிக்காமல் 5சதவீதம் சாத்தியமா?
ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் அதன் வரையறைகள் அனைத்தும் என்.சி.டி.யின் படி உள்ளது... 2012 மற்றும் 2012மறு தேர்வு என இரு தேர்வுகள் அவர்களின் வரையறை படி நடத்திவிட்டு திடீரென்று 2013 தேர்வுக்கு மட்டும் என்.சி.டி.யை கலந்து ஆலோசிக்காமல் 5 சதவீதம் இட ஒதுக்கீடு எவ்வாறு அளித்தார்கள் அவ்வாறு அளிக்க தமிழக அரசால் இயலுமா? அதற்கு அதிகாரம் வரைமுறை உள்ளதா? நமது சங்க வழக்கறிஞர் தெளிவான வாதத்ததை முன்வைக்கிறார்.... என்.சி.டி.இ -யை தமிழக அரசு பரிசீலிக்காமல் கொடுத்தா? என அறிய அவர்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பவும் ஒரு மனுதாரராக சேர்க்க வாய்ப்பு.... கலந்து ஆலோசிக்காமல் கொடுத்தது தெரிய வந்தால் 5சதவீதம் ???
போட்ட அப்பாயின்மென்டுக்கு ஆபத்தா?
5சதவீதம் வழக்கு குறித்து நமது வழக்கறிஞர் திரு இராஜஇராமன் அவர்கள் தெரிவித்தது ' இவ்வழக்கு என்பது புதிய அத்தியாயம் படைக்கும் என நம்பிக்ககை தெரிவித்தார் மேலும் 5சதவீத சலுகை குறித்து கேட்டபோது... மாநில அரசுக்கு 5சதவீதும் அளிக்க உரிமை இருக்கிறதா இல்லையா என என்.சி.டி தான் விளக்கவேன்டும்.. ஒருவேளை அவர்களை கலந்து ஆலோசிக்காமல் அவர்களின் அனுமதி இல்லாமல் சலுகை அளித்திருந்தால் வழக்கு மேலும் சிக்கலாகும் என சூசகமாக தெரிவித்தார்....

Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support