நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

திங்கள், 25 டிசம்பர், 2017

விடுமுறையில் பயிற்சி ' ஜேக்டோ ஜியோ இயக்குனர் சந்திப்பு!

அரையாண்டு விடுமுறையில் கணினி பயிற்சி மேற்கொள்ள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வேலைநிறுத்தத்தில்  ஈடுபடாத சங்கங்களின் கைங்கரியம் இதில் உள்ளதையும் மறுப்பதற்கில்லை.இந்நிலையில் ஜேக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று 26-12-2017  இயக்குனரை சந்தித்து ஏற்கனவே வேலைநிறுத்த நாட்கள் ஈடுசெய்யப்பட்ட நிலையிலும், மேலும் ஈடு செய்ய வாய்ப்புள்ள நிலையிலும் விடுமுறை பயிற்சி ஆணையை ரத்து செய்ய இயக்குநரிடம் கேட்டுக்கொள்ளவிருக்கிறார்கள்.

ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.

Share:

வெள்ளி, 15 டிசம்பர், 2017

ஜேக்டோ ஜியோ சென்னையில் ஜனவரி 4 ம் வாரம் மமறியல் அறிவிப்பு

https://youtu.be/fbndKl81Mio
ஜேக்டோ ஜியோ சென்னையில் ஜனவரி 4 ம் வாரம் மமறியல் அறிவிப்பு

Share:

வெள்ளி, 8 டிசம்பர், 2017

ஜேக்டோ ஜியோ முடிவுகள்

ஜேக்டோ ஜியோ முடிவுகள்.
1)CPS,இடைநிலை ,முதுகலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நீதிமன்றங்களில் முதன்மை நீதிபதி அவர்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அளித்திட வேண்டும்.
2)ஓய்வு பெற்ற நீதிபதிகளை வைத்து போராட்டங்களில் நீதிமன்ற தலையீடு பற்றி!கருத்தரங்கம் திருச்சியில் நடத்துவது!
3)தனிச்சங்க நடவடிக்கை ஜேக்டோ ஜியோ வில் எடுக்கக்கூடாது!ஜேக்டோ ஜியோ முடிவுகள்.
1)CPS,இடைநிலை ,முதுகலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ,உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட நீதிமன்றங்களில் முதன்மை நீதிபதி அவர்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அளித்திட வேண்டும்.
2)ஓய்வு பெற்ற நீதிபதிகளை வைத்து போராட்டங்களில் நீதிமன்ற தலையீடு பற்றி!கருத்தரங்கம் திருச்சியில் நடத்துவது!
3)தனிச்சங்க நடவடிக்கை ஜேக்டோ ஜியோ வில் எடுக்கக்கூடாது!
ஜனவரி 4 வது வாரம் சென்னையில் மறியல்

Share:

புதன், 15 நவம்பர், 2017

ஜேக்டோ ஜியோ போராட்ட அறிவிப்பு!

ஜேக்டோ- ஜீயோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவெல்லிக்கேணி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 15.11.2017 மாலை 5 மணியளவில் நடை பெற்றது .
இக்கூட்டத்திற்கு ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஜேக்டோ ஜியோ  ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், மாயவன், வெங்கடேசன்,  சுப்ரமணியன், அன்பரசு, கே.பி.ஓ. சுரேஷ். சாந்தகுமார் மற்றும் ஜேக்டோ ஜியோ செய்தித் தொடர்பாளர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொணடனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ஜேக்டோ ஜியோ போரட்டத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது அரசு எடுத்துள்ள பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
2. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வேண்டும்.
3. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட  குழு  அறிக்கையை 30.11.2017க்குள் தவறாமல் பெற்று பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும்.
4. இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள்,பகுதிநேர ஆசிரியர்கள் போன்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
5. 8வது ஊதியக்குழுவில்  வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. 24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் லட்சக்கனக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 1.12.2017 அன்று நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.

Share:

திங்கள், 13 நவம்பர், 2017

ஜேக்டோ ஜியோ வழக்கு நிலை புது தகவல்

ஜேக்டோ ஜியோ வழக்கு நிலை புது தகவல்
ஜேக்டோ ஜியோ வழக்கு நீதிபதிகள் தேதியின் காரணமாக தள்ளிப்போனது வரும் வியாழன் 16/11/2017 அன்று நீதிபதிகள் ஒப்புதலோடு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் .

Share:

வியாழன், 9 நவம்பர், 2017

வெள்ளி, 3 நவம்பர், 2017

E Pay roll ல் புதிய ஊதியக்குழு ஊதியத்திற்கு கேட்கப்படும் விபரங்கள்!

E Pay roll ல் புதிய ஊதியக்குழு ஊதியத்திற்கு கேட்கப்படும் விபரங்கள்!

Share:

புதன், 18 அக்டோபர், 2017

20/10/2017 ம் இடைநிலை ஆசிரியர் கடமையும்!

20/10/2017 ம் இடைநிலை ஆசிரியர் கடமையும்!
ஊதியக்குழு அறிக்கை அரசாணை வெளிவந்து விட்டது.நாம் பயந்தபடியே முரண்களின் மொத்தவடிவமாக அமைந்துவிட்டது.இதெல்லாம் நடக்குமென்பதை அறிந்தே இருந்தோம் அனைவரும். ஒரு சிலரோ நம்புகிறோம் போராட்டம் வேண்டாமென்றார்கள்.இப்போதும் நம்புகிறோமென்கிறார்கள். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கோர்ட் எடுத்த நடவடிக்கை மூலம் கோர்ட் கெடுவிதித்த 13/10/2017 க்கு இரண்டுநாட்கள் முன்னதாக அரசாணை 303 வெளியிடப்பட்டது. அதுவும் அரசாணை வெளியிடப்படாவிட்டால் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டிய சூழலில் மொத்த ஊதிய அதிகரிப்பே 20 சதம் இல்லாத நிலை. இதற்கு அரசாணையையே வெளியிட்டு விடலாம் இதை வைத்து சிறிதுகாலம் குழப்பலாம் என்ற சிறுமதியாளர் சூழ்ச்சி. இதெல்லாம் விட மிகப்பெரும் அதிர்ச்சி, வேதனை இந்த ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு சரிசெய்யப்பட காத்திருந்தும் ஏமாற்றம் தலையில் இடியென. கோர்ட் 23/10 ல் கூடுகிறது.வழக்கறிஞர் மூலம் வாதங்கள் நாம் வைத்தாலும் அரசுக்கு நாம் உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளோம் ,இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு களையாமல் ஓயமாட்டோம்.CPS ஐ முற்றாக களையும் வரை போர்க்களத்தை துறக்கமாட்டோம் என்ற நிலை உணரவைக்க அணி அணியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில்களில் திரள்வோம்.நம் முகத்தில் கரி பூசிட துணிந்தவர் முன் முகம் சிவக்க அணி வகுப்போம்.வெற்றி நமதே!

டே.குன்வர்.
மாநிலதலைவர்
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி

Share:

திங்கள், 16 அக்டோபர், 2017

தமிழை 'மட்டும்' புறக்கணித்த மத்திய அரசு வெப்சைட்.. செம்மொழிக்கு நேர்ந்த அவமரியாதை!

தமிழை 'மட்டும்' புறக்கணித்த மத்திய அரசு வெப்சைட்.. செம்மொழிக்கு நேர்ந்த அவமரியாதை!
டெல்லி: மத்திய அரசின் 'ஏக்பாரத்' என்ற இணையதளத்தில் தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த வெப்சைட்டில், இந்தியாவின் கலாசாரங்கள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாசாரங்கள், பண்பாடு, பண்டிகைகள் படத்தோடு விளக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தின் நோக்கங்கள் என்ற பிரிவில், மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் இதன் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு வகையான கலாசாரங்கள் இருப்பதை பெருமையாக அது குறிப்பிட்டுள்ளது.
வெப்சைட்டின், முகப்பு பக்கத்தில், 'ஏக்பாரத் சிரேஷ்ட பாரத்' (ஒரே இந்தியா சிறந்த இந்தியா) என்று ஹிந்தி, தெலுங்கு உட்பட இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது.
ஆனால், செம்மொழியான தமிழ் மொழிக்கு அதில் இடம் இல்லை. நம்மை விட குட்டி மாநிலமான கேரளாவின் மலையாளம் கூட முகப்பில் இடம்பெற்றுள்ள நிலையில், கல் தோன்றி, மண்தோன்றா காலத்தே உருவான தமிழுக்கு அங்கு இடமில்லை.

Share:

சனி, 14 அக்டோபர், 2017

இடைநிலை ஆசிரியருக்கு எது தீபாவளி!

இடைநிலை ஆசிரியருக்கு எது தீபாவளி!
வேலைநிறுத்தம் முடித்து, வேலைநிறுத்த நாட்களை நாமே ஈடு செய்வோம் என்று அறிவித்துவிட்டு போராடிய நிலையில் நீதிமன்றமும் ஈடுசெய்து கொள்ளக்கூறிவிட்டது!இந்நிலையில் கல்வித்துறை தன் ச்சபட்ச விசுவாசத்தைக் காட்ட தீபாவளியன்றும் பணிசெய்ய ஆணையிட்டு பணித்திருக்கிறது.இது ஒன்றும் நமக்கு வருந்தற்குரிய செய்தி அல்ல!நம் கோரிக்கைகள் வெல்ல தீபாவளியன்று சிறையில் இருக்கக்கூட தயாராக இருந்த நமக்கு பணி செய்தல் மகிழ்ச்சியே!ஆனால் கல்வித்துறை மாணவர்கள் வருவார்களா?என்பதை உணராமல் ஆணைபிறப்பித்தார்களா?அல்லது தீபாவளி என்று அறியாமல் ஆணையிட்டார்களா?தெரியாது!பின் இந்த ஆணையில் மாற்றம் செய்தால் கல்வித்துறை பொறுப்பற்ற நிலை அல்லது பழிவாங்கும் நிலை வெளிப்படும்.மாற்றம் செய்யப்படாவிட்டால் அரசின் திட்டமிட்ட பழிவாங்கும் நிலை வெளிப்படும்.எதுவரினும் கவலையில்லை.இடைநிலை ஆசிரியர் நிலை போராட்டத்தின் பின்னும் ,ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட பின்னும் அதே நிலையே தொடர்கிறது.இடைநிலை ஆசிரியரோ கண்ணீரோடு விக்கித்து நிற்கின்றார்.கொண்டாட்ட மனப்பான்மை ஏது.இந்நிலையில் நன்றி சொல்ல ஏதுமில்லை எனாத்தெரிந்தும் குரூர சிந்தையோடு ஒரு கூட்டம் நன்றி தெரிவிக்கும் நிலை.நீண்ட தூர போராட்ட பாதையானாலும், முழுமையாக நம்மை தியாகப்படுத்திக்கொள்கிற போராட்டமானாலும் சரி எப்போது ஊதியமுரண்பாடு களையப்படுகிறதோ?எப்போது புதிய ஓய்வூதிய திட்டம் ஒழிக்கப்படுகின்றதோ?அன்றுதான் உண்மையான தீபாவளி ஆசிரியர் சமுதாயம் கொண்டாட இயலும்.தயாராவோம் இன்னொரு போருக்கு! டே.குன்வர். மாநிலதலைவர் ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி.
Share:

வெள்ளி, 13 அக்டோபர், 2017

JSR TESTF மாநிலதலைவர் குன்வர் உரை

7வது சம்பளக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஜாக்டோஜியோ ஆலோசனை கூட்டத்தில் கொந்தளிக்கும் மாநில தலைவர்.....

Share:

ஜேக்டோ ஜியோ முடிவுகள்

1) 20/10/2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஊதியக்குழு முரண்பாடுகளை,அரசின் ஏமாற்றுத்தனத்தை கூட்டம்போட்டு விளக்குதல்
2)23/10/2017 க்குள் இடைநிலைஆசிரியர் உட்பட முரண் நீக்கப்பட்டு 21 மாத நிலுவை வழங்கப்படாவிட்டால் போராட்ட நடவடிக்கைகளை 24/10/2017 அன்று ஜேக்டோ ஜியோ கூடி முடிவெடுக்கும்.

Share:

ஜேக்டோ ஜியோ அதிருப்தி

ஜேக்டோ ஜியோ கூட்டத்தில் ஊதியக்குழு அரசாணை மீது அதிருப்தி! காரசாரமான விவாதம் நடக்கிறது!
போராட்டம்தான் தீர்வென முடிவாற்றம்!

Share:

ஜேக்டோ ஜியோ கூட்டம் தொடங்கியது!

ஊதியக்குழு அறிக்கை அமல்படுத்திய பின்னும் வேதனையான சூழலில் ஜேக்டோ ஜியோ கூட்டம் சென்னை அரசூழியர் சங்கக் கட்டிடத்தில் தொடங்கியது!ஊதியக்குழு அரசாணை முரண்பாடுகளின் மொத்த வடிமாக உள்ளதை எதிர் கொள்வது குறித்து ஆவேச ஆலோசனை தொடங்கியுள்ளது.

Share:

வியாழன், 12 அக்டோபர், 2017

போராட்டம் சாதிக்குமா?சந்திப்பு சாதிக்குமா?

ஊதியக்குழு அறிவிப்பு வந்தேவிட்டது. எதிர்பார்த்தபடியே அனைவரின் தலையிலும் பேரிடியை இறக்கிவிட்டிருக்கிறது.நிலுவைத்தொகை இல்லை என்பதைவிட இந்த எட்டாவது ஊதியக்குழு அறிவிப்பிலாவது இடைநிலை ஆசிரியர்கள் ஊதியமுரண்பாடு தீர்க்கப்படவேண்டும் என்ற நம் எதிர்பார்ப்பில் மண்அள்ளிப் போடப்பட்டிருக்கிறது.இந்நிலைக்கு நாம்தான் காரணம்.சரியான முறையில் அரசுக்கு நெருக்கடி நாம் தரவில்லை என்பதே உண்மை.அற்புதமாக அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்தோம் ,போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்தோம்.போராட்டப்பாதையில் பயணித்தவர்களே திடீர் ஞானோதயம் பெற்று நாங்கள் நம்புகிறோம் முதல்வரை போராட்டம் வேண்டாமென முடிவெடுத்து கோரிக்கைகளையும், போராட்டத்தையும் பலவீனப்படுத்தினார்கள். அதோடு போராட்ட பாதையை பலவீனப்படுத்த என்னென்ன வழிகள் உண்டோ அதையெல்லாம் செய்தார்கள்.தன்னெழுச்சியாக வந்தவர்களைத் தடுக்க அரசியல் வண்ணம் பூசிப்பார்த்தார்கள் :பேரியக்கமென்ற போதையூட்டி மயக்கநிலைக்கு இட்டுச்சென்று போர்க்குணம் மழுங்கடித்தார்கள். பத்தாண்டுகாலம் சாதிக்கமுடியாத ஊதிய முரணை பேசியே சரி செய்வோமென்றார்கள்.இன்று இப்படித்தான் வரும் என்பது அவர்களும் அறிந்ததே.தெரிந்தே செய்த துரோகம் எனக் கொள்ளலாமா? கண்ணீரோடு நிற்கும் இடைநிலை ஆசிரியர்செய்த பாவம்தான் என்ன?கேட்ட போதெல்லாம் ரசீது போட்டு பணம் கொடுத்து,ஏ.சி.அறைகள் கட்ட நிதி கொடுத்து,கூப்பிட்ட போதெல்லாம் கூட்டம் காட்ட நீங்கள் பெருமை கொள்ள சொந்தப்பணத்தில் ஓடி வந்து அணிவகுத்து நின்று, இன்றோ அவர் நிலை? இன்னும் சந்திப்போம் சாதிப்போமென்றால்? பொய்கள் கூடி நியாயம் பேசுதல் அறமாகா!போராட்டத்தில் இணையுங்கள். போராட்டப்பாதை தாய்ப்பால். சந்திப்பு என்பது கள்ளிப்பால்.இடைநிலை ஆசிரியருக்கு எதை வழங்கப்போகிறீர்கள்? தாய்ப்பாலா?கள்ளிப்பாலா?
டே.குன்வர்
மாநிலதலைவர்
ஜே.எஸ்.ஆர்..தொ.ப.ஆ.கூட்டணி.

Share:

கொடைக்கானல் எஸ்கேப் சாலை மர்மம்

Escape road

கொடைக்கானல் நகரிலிருந்
து மூணாறு நகரை இரண்டு
மணி நேரத்தில் சென்றடைய
ஏதுவான வழியே இந்த எஸ்கேப் ரோடு...இயற்கை எழில் கொட்டிக்கிடக்கும் இந்த
சாலையைத்  திறக்க ஏன்
நாம் குரல் கொடுக்க கூடாது
என்ற எனது அண்ணன் எல்ல
ப்பட்டி முத்துராசுக்காக இந்த
பதிவு...

ஒருபுறம் சுற்றுலா என்றால்
கூட இன்னொரு புறம்...வர்த்த
க வாய்ப்புக்காகவும் இந்த
சாலையை திறக்க நாம் குரல்
கொடுக்க வேண்டிய தேவை
இருக்கிறது...என்றே நினைக்
கிறேன்...

கடல் மட்டத்தில் இருந்து  2480
மீட்டர் உயரத்தில் அமைந்துள்
ள இந்தச்சாலை 1925 ம் ஆண்
டு பிரிட்டிஷ்காரர்களால் போட
ப்பட்டிருக்கிறது...கொடைக்கா
னலிலிருந்து பேரீச்சம் ஏரி
வழியாக டாப்ஸ்டேசன் வரை
இந்த சாலை அமைக்கப்பட்டது

இந்த டாப்ஸ்டேசன் இன்றும்
தமிழக எல்லைக்குள் வரும் ஒரு ஊராகும்...போடி அருகே
உள்ள கொட்டக்குடி பஞ்சாயத்
திற்குட்பட்ட பகுதியாகும்...
இங்குள்ள view point வழியாக
குரங்கணி பாதையை பார்த்து
மகிழ்வது  பூலோக சொர்க்கம்.

இரண்டாவது உலகப்போர்
நடந்த போது திடீரென சென்
னையைத்தாக்கியது ஜப்பான்
அப்போது அங்கிருந்த பிரிட்டி
ஷ் அதிகாரிகள் தங்கள் உயிருக்கு பயந்து கொடைக்
கானல் வந்திருக்கிறார்கள்...
அங்கும் பயம் போகாததால்
அங்கிருந்து தப்பி டாப்ஸ்டேச
ன் வந்து மூணாறு வழியாக
கொச்சி க்கு சென்று அங்கிரு
ந்து கடல் மார்க்கமாக பிரிட்ட
னுக்குச்சென்றிருக்கிறார்கள்.
ஜப்பானுக்கு பயந்து எஸ்கேப்
ஆகி ஓடியதால்...சாலைக்குப்
பெயரே அதுவாகி விட்டது...

1990- வரை பயன்பாட்டிலிருந்
த இந்த சாலை கேரள வனத்
துறையின் அடாவடியால் இழு
த்துப்பூட்டப்பட்டது...பூட்டியதோ
டு நிற்கவில்லை மலையாள
அரசு...அந்த சாலையை உள்ள
டக்கி ஒரு சரணாலயத்தையும்
அமைத்து...அதற்கு பாம்பாடு
ம் சோலை தேசீயப்பூங்கா என
பெயரும் சூட்டியது...இதனால்
எஸ்கேப் ரோடு இழுத்துப்பூட்டி
சீல் வைக்கப்பட்டது...மேலாக
இடுக்கி மாவட்ட வனத்துறை
டாப்ஸ்டேசனிலிருந்து எஸ்கே
ப் ரோடு தொடங்குமிடத்தில்
ஒரு வனத்துறை சோதனைச்
சாவடியையும் அமைத்து ஆள்
போட்டது...

நீங்கள் மூணாறிலிருந்து கிரா
ம்ஸ்லேண்ட்...குண்டல அணை
மாட்டுப்பட்டி அணை...செண்டு
பாறை...சிட்டிவாரை...எல்லப்ப
ட்டி வழியாக டாப்ஸ்டேசனை
அடைந்து அங்கிருந்து வனச்
சாலை வழியாக தமிழக எல்
லைக்குள் அமைந்துள்ள பேரீ
ச்சம் ஏரி வழியாக கொடைக்
கானலை அடையமுடியும்...
பயண நேரம் வெறும் இரண்டு
மணிநேரம் மட்டுமே...ஆனால்
இப்போது நீங்கள் மூணாறிலி
ருந்து கொடைக்கானல் செல்
ல பூப்பாறை போடிமெட்டு
தேனி பெரியகுளம் காட்ரோடு
வழியாக செல்லவேண்டும்
பயணநேரம் ஐந்து மணிநேரம்

இதில் வெறும் சுற்றுலா மட்டு
மல்ல...மேலாக மூணாறு to
டாப்ஸ்டேசன் வரையுள்ள 29
கிமீ சாலையிலுள்ள TATA
வின் தேயிலைத்தோட்டத்தில்
நமது தமிழ் தேயிலைத்தோட்ட
தொழிலாளர்கள் தங்கள் ஓய்
வு நேரத்தில் உருவாக்கிய
விவசாய பூமியில் கேரட்டும்
உருளைக்கிழங்கும் டன் கண
க்கில் விளைந்து குவிகிறது...
எல்லப்பட்டி கிராமமே இதில்
முதலிடத்தில் இருக்கிறது..இப்
படி விளையவைக்கும் காய்க
றிகளுக்கு சரியான சந்தை
வாய்ப்பு இல்லாததால்....சா
லையோரத்தில் கடைபோட்டு
டாப்ஸ்டேசன் வரும் சுற்றுலா
பயணிகளுக்கு வெறும் ஐந்து
க்கும் பத்துக்கும் விற்றுக்கொ
ண்டிருக்கிறார்கள்...

பேரீச்சம் ஏரி வழியாக கொடைக்கானல் செல்லும்
எஸ்கேப் சாலை திறக்கப்பட்டா
ல் பல்லாயிரக்கணக்கான தமி
ழ் மக்களின் உழைப்பை காசா
க்கமுடியும்...

டாப்ஸ்டேசன் வரும் கேரள
சுற்றுலா பயணிகள் வெகு
எளிதாக கொடைக்கானல்
மலையை அடையமுடியும்....

இல்லாவிட்டால் கொடைக்கா
னல் மலையிலிருந்து கிளாவ
ரை என்கிற தமிழக எல்லைப்
பகுதியிலிருந்து...வெறும் பத்
து கிமீ தூரத்தில் கேரள மாநி
லத்துக்குட்பட்ட....தமிழர்கள்
மட்டுமே வாழும் கோவிலூர்
வருகிறது...இந்த கோவிலூர்
நகரிலிருந்து டாப்ஸ்டேசன்
வெறும் ஏழு கிமீ தான்...இந்த
பண்படுத்தப்படாத சாலையை
யே இப்போது தட்டுத்தடுமாறி
வட்டவடை...கோவிலூர் தமிழ்
மக்கள் பயன்படுத்தி வருகிறா
ர்கள்...இந்த சாலையில் மூன்
று கிமீ மட்டும் பாம்பாடும்
சோலை தேசீயப்பூங்கா குறுக்
கிடுகிறது...

ஒன்று டாப்ஸ்டேசன் பேரீச்சம் ஏரி வழியாக செல்லும் எஸ்கே
ப் சாலையை திறப்பது...

இரண்டு வட்டவடை கோவிலூ
ர் கிளாவரை வழியாக கொடைக்கானல் நகரை அடைவது வரையிலான சாலையைத்திறப்பது...என
இரண்டு வாய்ப்புகள் இருக்கி
றது...

இடுக்கி தமிழர்களின் மேல்
மிகுந்த அக்கறையுடன் இந்த
கோரிக்கையை நான் கேரள
வனத்துறை அமைச்சர் திரு
புனலூர் ராஜீ அவர்களுக்கு
அனுப்பி வைக்க இருக்கிறேன்

அண்ணன் செந்தமிழன்
சீமான் வழிகாட்டுதலோடும்
மற்றும் மூத்தவர்களின் அன்
போடும்....

இதற்கு உறுதுணையாக இரு
க்கும் வட்டவடை கோவிலூர்
எல்லப்பட்டி சிட்டிவாரை செண்
டுவாரை கிராம்ஸ்லேண்ட்
நெற்றிக்குடி அருவிக்காடு
தமிழர்களுக்கும்...அண்ணன்
மூணாறு மோகன்ராஜ் அவர்
களுக்கும் நாம்தமிழர் கட்சி
பிள்ளைகள் செலுத்தும் நன்
றியும்....அன்பும்...

ச அன்வர் பாலசிங்கம்

Share:

ஊதிய முரண்.- டாக்டர் ராமதாஸ் அறிக்கை"

அரசு ஊழியர்களுக்கு 21 மாத நிலுவைத் தொகையை மறுப்பதன் மூலம் ரூ.26,000 கோடியை ஏமாற்ற அரசு துடிப்பதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் ஊதிய விகிதம் குறித்த குறைகள் களையப்படவில்லை.

மத்திய அரசு பணியாளர்களுக்கான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்த மத்திய அரசு, ஊதிய உயர்வில் எந்த பிரிவினருக்கும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஊதியக் காரணி என்ற புதிய முறையை பயன்படுத்தியது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் 01.01.2016 அன்று வாங்கிய அடிப்படை ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. அதனால் ஊதிய உயர்வில் பாகுபாடு காட்டப்படவில்லை. அதேபோன்ற அணுகுமுறையையே தமிழக அரசும் இப்போது பின்பற்றி புதிய ஊதிய விகிதங்களை நிர்ணயித்துள்ளது.

இதனால் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. ஆனால், இதற்கு முன்பிருந்த ஊதிய விகிதங்களில் உள்ள குறைபாடுகள் இன்னும் களையப்படாமல் அப்படியே நீடிக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு முன் ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவால் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பல்வேறு பிரிவினரின் ஊதிய விகிதங்கள் தாறுமாறாக மாற்றப்பட்டன.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களில் உள்ள குளறுபடிகள் களையப்பட வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகவே அவர்கள் போராடி வந்தனர். ஆனால், அந்தக் குளறுபடிகள் தீர்க்கப்படாத நிலையில், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது அவை சரி செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்காமல் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தியிருக்கிறது. இதனால் ஊதிய முரண்பாடுகள் சரிசெய்யப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது. உடனடியாக ஒரு நபர் குழு அமைத்து, அடுத்த 3 மாதங்களில் அதன் அறிக்கையைப் பெற்று ஊதிய விகிதங்களில் நீடிக்கும் முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்தியமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களின்படி தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 ஆகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகபட்ச ஊதியத்தில் வெறும் 7% மட்டுமே குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் குறைந்தபட்ச ஊதியம் என்பது அதிகபட்ச ஊதியத்தில் 8% ஆக இருந்தது. புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்படும் போது குறைந்தபட்ச ஊதியத்திற்கும், அதிகபட்ச ஊதியத்திற்கும் வேறுபாடு குறைய வேண்டுமே தவிர அதிகரிக்கக்கூடாது. ஆனால், இப்போது இடைவெளி அதிகரித்திருப்பதால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அதிகரிக்கும்.

அதேபோல், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றின் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சத்துக்கு இடையிலான வித்தியாசமும் அதிகரித்திருக்கிறது. பொதுவாக அதிகபட்ச ஊதியத்தில் 20 விழுக்காடாவது குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட்டால் தான் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஓரளவாவது மட்டுப்படுத்த முடியும். தமிழக அரசின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தப்பட்ச ஊதியத்தை, அதிகபட்ச ஊதியத்தில் 10 விழுக்காடாக, அதாவது ரூ.22,500 ஆக நிர்ணயிக்க வேண்டும். அதேபோல், குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.12,000 ஆக அரசு உயர்த்த வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக புதிய ஊதிய விகிதங்கள் 01.01.2016 முதல் கருத்தியல் அடிப்படையிலும், 01.10.2017 முதல் பணப்பயன் அடிப்படையிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது 01.01.2016 முதல் இப்போது வரையிலான 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும்.

இதற்கு முந்தைய 6 ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் போதும் ஊதிய உயர்வு நிலுவை ஒரு தவணையிலோ, பல தவணையிலோ வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டபோது கூட நிலுவைத்தொகை ஒரே தவணையில் வழங்கப்பட்டது. அவ்வாறு இருக்க தமிழக அரசு ஊழியர்களுக்கு மட்டும் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க இயலாது என்று அரசு கூறுவது எந்த வகையில் நியாயம்?

இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் 01.01.2016 முதல் 20% இடைக்கால நிவாரணம் வழங்கும்படி தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. ஆனால், 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு சேர வேண்டிய ரூ.26,000 கோடியை ஏமாற்றத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். இது சிறிதும் நியாயமற்றது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை தவணை முறையிலாவது வழங்க தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support