20/10/2017 ம் இடைநிலை ஆசிரியர் கடமையும்!
ஊதியக்குழு அறிக்கை அரசாணை வெளிவந்து விட்டது.நாம் பயந்தபடியே முரண்களின் மொத்தவடிவமாக அமைந்துவிட்டது.இதெல்லாம் நடக்குமென்பதை அறிந்தே இருந்தோம் அனைவரும். ஒரு சிலரோ நம்புகிறோம் போராட்டம் வேண்டாமென்றார்கள்.இப்போதும் நம்புகிறோமென்கிறார்கள். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கோர்ட் எடுத்த நடவடிக்கை மூலம் கோர்ட் கெடுவிதித்த 13/10/2017 க்கு இரண்டுநாட்கள் முன்னதாக அரசாணை 303 வெளியிடப்பட்டது. அதுவும் அரசாணை வெளியிடப்படாவிட்டால் 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டிய சூழலில் மொத்த ஊதிய அதிகரிப்பே 20 சதம் இல்லாத நிலை. இதற்கு அரசாணையையே வெளியிட்டு விடலாம் இதை வைத்து சிறிதுகாலம் குழப்பலாம் என்ற சிறுமதியாளர் சூழ்ச்சி. இதெல்லாம் விட மிகப்பெரும் அதிர்ச்சி, வேதனை இந்த ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு சரிசெய்யப்பட காத்திருந்தும் ஏமாற்றம் தலையில் இடியென. கோர்ட் 23/10 ல் கூடுகிறது.வழக்கறிஞர் மூலம் வாதங்கள் நாம் வைத்தாலும் அரசுக்கு நாம் உணர்ச்சி கொந்தளிப்பில் உள்ளோம் ,இடைநிலை ஆசிரியர் ஊதியமுரண்பாடு களையாமல் ஓயமாட்டோம்.CPS ஐ முற்றாக களையும் வரை போர்க்களத்தை துறக்கமாட்டோம் என்ற நிலை உணரவைக்க அணி அணியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில்களில் திரள்வோம்.நம் முகத்தில் கரி பூசிட துணிந்தவர் முன் முகம் சிவக்க அணி வகுப்போம்.வெற்றி நமதே!
டே.குன்வர்.
மாநிலதலைவர்
ஜே.எஸ்.ஆர்.த.தொ.ப.ஆ.கூட்டணி
0 comments:
கருத்துரையிடுக