ஊதியக்குழு அறிவிப்பு வந்தேவிட்டது. எதிர்பார்த்தபடியே அனைவரின் தலையிலும் பேரிடியை இறக்கிவிட்டிருக்கிறது.நிலுவைத்தொகை இல்லை என்பதைவிட இந்த எட்டாவது ஊதியக்குழு அறிவிப்பிலாவது இடைநிலை ஆசிரியர்கள் ஊதியமுரண்பாடு தீர்க்கப்படவேண்டும் என்ற நம் எதிர்பார்ப்பில் மண்அள்ளிப் போடப்பட்டிருக்கிறது.இந்நிலைக்கு நாம்தான் காரணம்.சரியான முறையில் அரசுக்கு நெருக்கடி நாம் தரவில்லை என்பதே உண்மை.அற்புதமாக அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்தோம் ,போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்தோம்.போராட்டப்பாதையில் பயணித்தவர்களே திடீர் ஞானோதயம் பெற்று நாங்கள் நம்புகிறோம் முதல்வரை போராட்டம் வேண்டாமென முடிவெடுத்து கோரிக்கைகளையும், போராட்டத்தையும் பலவீனப்படுத்தினார்கள். அதோடு போராட்ட பாதையை பலவீனப்படுத்த என்னென்ன வழிகள் உண்டோ அதையெல்லாம் செய்தார்கள்.தன்னெழுச்சியாக வந்தவர்களைத் தடுக்க அரசியல் வண்ணம் பூசிப்பார்த்தார்கள் :பேரியக்கமென்ற போதையூட்டி மயக்கநிலைக்கு இட்டுச்சென்று போர்க்குணம் மழுங்கடித்தார்கள். பத்தாண்டுகாலம் சாதிக்கமுடியாத ஊதிய முரணை பேசியே சரி செய்வோமென்றார்கள்.இன்று இப்படித்தான் வரும் என்பது அவர்களும் அறிந்ததே.தெரிந்தே செய்த துரோகம் எனக் கொள்ளலாமா? கண்ணீரோடு நிற்கும் இடைநிலை ஆசிரியர்செய்த பாவம்தான் என்ன?கேட்ட போதெல்லாம் ரசீது போட்டு பணம் கொடுத்து,ஏ.சி.அறைகள் கட்ட நிதி கொடுத்து,கூப்பிட்ட போதெல்லாம் கூட்டம் காட்ட நீங்கள் பெருமை கொள்ள சொந்தப்பணத்தில் ஓடி வந்து அணிவகுத்து நின்று, இன்றோ அவர் நிலை? இன்னும் சந்திப்போம் சாதிப்போமென்றால்? பொய்கள் கூடி நியாயம் பேசுதல் அறமாகா!போராட்டத்தில் இணையுங்கள். போராட்டப்பாதை தாய்ப்பால். சந்திப்பு என்பது கள்ளிப்பால்.இடைநிலை ஆசிரியருக்கு எதை வழங்கப்போகிறீர்கள்? தாய்ப்பாலா?கள்ளிப்பாலா?
டே.குன்வர்
மாநிலதலைவர்
ஜே.எஸ்.ஆர்..தொ.ப.ஆ.கூட்டணி.
வியாழன், 12 அக்டோபர், 2017
Home »
» போராட்டம் சாதிக்குமா?சந்திப்பு சாதிக்குமா?
0 comments:
கருத்துரையிடுக