நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

மாநகராட்சி பள்ளிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாணவர் சேர்க்கை.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்த நடப்பு கல்வி ஆண்டில் தமிழ் வழி கல்வி ஆங்கில வழிக் கல்வி ஆகிய இரண்டிலும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலை மாநகராட்சிப் பள்ளிகளில்  6206 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.அதையொட்டி மாநகராட்சி பள்ளி கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்
Share:

சனி, 19 செப்டம்பர், 2020

பள்ளிக்கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிக்கு 635 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக பள்ளிக்கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிக்கு 635 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு முதல்வர் அவர்களால் 7 நபர்களுக்கு இன்று பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 
Share:

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது தனிஊதியம் 2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா? ஜே.எஸ்.ஆர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கேள்விக்கு முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.

இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது தனிஊதியம் 2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா? ஜே.எஸ்.ஆர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கேள்விக்கு முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.
Share:

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

புதிய கல்வி கொள்கை ஆய்வு செய்ய பள்ளி கல்வி துறை சார்பில் தமிழகத்தில் குழு

புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்ய பள்ளி கல்வி துறை சார்பில் 13 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது
இதன் தலைவராக சிஜி தாமஸ் இருப்பார்.இந்தகுழு 8நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என்று அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
Share:

புதிய கல்வி கொள்கை இயக்கங்கள் கருத்து கேட்பு தமிழகத்தில் தொடங்குகிறது.

புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது சார்பாக தமிழகத்தில் ஆசிரிய இயக்கங்கள் சார்பாக கருத்து கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வரும் 10-09-2020 அன்று மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆசிரியர் அமைப்புகளை அழைத்து கருத்து கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகின்றன.இந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜா.க.சார்பில் ஒரு இயக்கம் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Share:

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் டிஜிட்டல் முறைக்கு மாறிய ஆசிரியர் தின விழா: வீட்டிலிருந்தவாறு நடனமாடி வாழ்த்துக்கூறிய மாணவிகள்

கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி பள்ளி மாணவிகள் நேற்று ஆன்லைன் மூலம் ஆசிரியர் தின விழாவை உற்சாகமாக கொண்டாடினர். தங்களது வீடுகளில் இருந்தவாறே பாட்டுப்பாடி, நடனமாடி ஆசிரியைகளுக்கு வாழ்த்து கூறினர்.
Share:

சனி, 5 செப்டம்பர், 2020

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.ஆன்கல்வி மூலம் மாணவர்கள் தற்கொலை, ஆன்லைன் கல்விக்காக ஆன்ட்ராய்டு மொபைல் வாங்க மக்கள் படும் சிரமங்கள் போன்ற வற்றையும் எதிர் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பையும் கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.ஆன்லைன் கல்விக்கு தேர்வு நடத்தக்கூடாது, பதிவேடுகள் பராமரிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Share:

வியாழன், 3 செப்டம்பர், 2020

புதன், 2 செப்டம்பர், 2020

நல்லாசிரியர் விருது விழா செப்டம்பர் 7க்கு மாற்றம் செய்யப்பட்டது

நல்லாசிரியர் விருது விழா செப்டம்பர் 7க்கு மாற்றம் செய்யப்பட்டது.முதலமைச்சர் 10 பேருக்கு மட்டும் விருதுகள் அவர் கையால் வழங்க உள்ளார்.மீதி பேருக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்படும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதால் 5ம் தேதிக்கு பதில் 7 ம் தேதிக்கு மாற்றப்பட்டது.பட்டியல் இன்று 03-09-2020 வெளியாகிறது.
Share:

தேவையில்லாத காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது*.

 


*தேவையில்லாத காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது*.


நெல்லை மாவட்டம் நாங்குநேரி இலங்குளம் ஆர்.சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு இடைநிலை ஆசிரியராக ஏ.பாக்கியா ரெக்ஸிலின் நியமிக்கப்பட்டார்.


இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தை நிராகரித்து வட்டார கல்வி அலுவலர் 23.1.2019-ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தனது பணி நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பாக்கியா ரெக்ஸிலின் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:


வட்டார கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவில் பள்ளி நிர்வாகத்தின் கடிதத்தை நிராகரிக்க தேவையற்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க கடிதம் அனுப்பும் போது, பள்ளியின் தீத்தடுத்து மற்றும் சுகாதாரச் சான்றிதழ் கேட்பது அபத்தமானது. இதுவரை கேள்விப்படாத ஒன்று.


ஆசிரியர் பணி நியமனத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் மாவட்ட கல்வி அலுவலருக்கு தான் உண்டு. வட்டார கல்வி அலுவலர் பள்ளியின் கடிதத்தை மாவட்ட கல்வி அலுவலருக்கு பரிந்துரை மட்டுமே செய்ய வேண்டும்.


பரிந்துரை அதிகாரம் மட்டுமே உள்ள வட்டார கல்வி அலுவலர் இயந்திரத்தனமாக செயல்பட்டு, தேவையற்ற காரணங்களை கூறி பள்ளியின் கடிதத்தை நிராகரித்துள்ளார்.


வட்டார அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல் முறையல்ல. பலமுறை நடைபெற்றுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை நாடுவதால் நீதிமன்றத்தின் சுமை தேவையில்லாமல் அதிகமாகிறது.


நீதிமன்றம் பலமுறை தெரிவித்தும் மனதை செலுத்தாமல் தேவையற்ற காரணங்களை குறிப்பிட்டு இயந்திரத்தனமாக உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளை ஏற்கக்கூடாது. பொருந்தா காரணங்களை கூறி உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.


எனவே நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் 2 வாரத்தில் பணத்தை கரோனா நிவாரணப் பணிக்காக உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். வட்டார கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கை மீது மாவட்ட கல்வி அலுவலர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support