This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
காலதாமத அரசாணைகள்!அலைகழிப்பு குமுறல்!
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018
கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது
கீழ்கண்ட சிவில் வழக்குகளில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது !
1.நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள்
2. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள்
3.ஒப்பந்த வழக்குகள்
4. விளம்புகை பரிகார வழக்குகள்
5. ஏற்றது ஆற்றுக வழக்குகள்
6பாகப் பிரிவினை வழக்குகள்
7. இழப்பீடு ( நஷ்ட ஈடு) கோருதல் வழக்குகள்
8. அவதூறு வழக்குகள்
9. வாரிசுரிமை வழக்குகள்
10. விவாகரத்து வழக்குகள்
11. அடைமான வழக்குகள்
12. அடைமானச் சொத்து மீட்பு வழக்குகள்
13. செயலுறுத்துக் கட்டளை வழக்குகள்
14. உறுத்துக் கட்டளை வழக்குகள்
15. கணவன்,மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வழக்குகள்
16. சீவனாம்ச வழக்குகள்
17. திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள்
18. நொடிப்புநிலை வழக்குகள்
19. காப்பாளர் நியமன வழக்குகள்
20. குழந்தைகளை மீட்பதற்கான வழக்குகள்
21. சொத்து மீட்பு வழக்குகள்
.இவ்வுரிமை வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது.
TNPSC_TRB_TET
#TNPSC_TRB_TET.
# ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600
# ஆர்லாண்டோ – இத்தாலி
# இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – ஜனவரி 26. 1950
# இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் – சர்தார் வல்லபாய் பட்டேல்
# இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் – டாக்டர் இராஜேந்திரபிரசாத்
# இந்துசமய மார்டின் லூதர்கிங் – சுவாமி தாயானந்த சரஸ்வதி
# இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் – லின்லித்கோ
# இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – பேலூர்
# உச்சிக் கொத்து வரைஸ் – வாழையில் உச்சிக்கொத்து நோய்
# ஒரு செல் உயிரிகள் – மலேரியா – நோய்ப் பரப்பி (எ.கா: கொசுக்கள்)
# ஒரு செல்லாலான சாறுண்ணி வகைப் பூஞ்சை – ஈஸ்ட்
# ஒவரா – இரகசிய காவல்படை
# கிளமண்சு – பிரான்சு
# கேசரி – பாலகங்காதர திலகர்
# சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது – தேசியம்
# சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
# சாந்தோமோனாஸ்ஒரைசே – பாக்டீரில் பிளைட் – நெல்
# சாந்தோமோனாஸ்சிட்ரி – சிட்ரஸ் கேன்சுர்
# சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி – சுயராஜ்ஜியம்
# சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் – மஞ்சு ஆட்சிக்காலம்
# சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை – சத்தியாகிரகம்
# சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
# செர்கோஸ்போரா அராசிகிடிக்கோலா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செர்கோஸ்போரா பெர்சனேட்டா – டிக்கா நோய் – வேர்க்கடலை
# செல் கொள்கையை உருவாக்கியவர்கள் ஜேக்கப் ஸ்லீடன், தியோடர் ஸ்சிவான்(1838-ல்)
# சொலரனாசீயாரம் – பாக்டீரியல் பிளைட் – நெல்
# சோடோமோனாஸ் – வில்ட் நோய் – உருளைக்கிழங்கு
# டியூஸ் – முசோலினி
# தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி – ஈ.வெ. ராமசாமி
# தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை அதன் காரணங்களையும் பற்றி அறியும் அறிவியல் பிரிவு நோயியல்
# தீங்குயிரிகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்
# தொழிற்சாலைத் துறையில் பெரும்பங்காற்றும் பாக்டீரியா – லாக்டிக் அமில பாக்டீரியா
# நியூலி உடன்படிக்கை – பல்கேரியா
# நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது – ஜின்னா
# பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – திலகர்
# பாக்டீரியா – காலரா, டைபாய்டு, டென்னஸ் எலிக்காய்ச்சல் தொழுநோய் – அசுத்தமான நீர், காயங்கள், விலங்குகளின் சிறுநீர், நேரடித் தொடர்புகள் மூலம் பரவுகின்றன.
# பாக்டீரியாக்கள் இரட்டைப் பிளவு முறையில் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பாசிகளைக் குறித்த அறிவியல் – பைக்காலஜி
# பி.என். கிர்பால் (6 மே 2002 முதல் 8 நவம்பர் 2002) – தில்லி
# பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் – கால்பர்ட்
# புகையிலை பல வண்ண வைரஸ் – புகையிலையில் பல வண்ண நோய்
# பூஞ்சைகள் – பாதத்துடிப்பு நோய் – ஸ்போர்கள் நிலம், தண்ணீர் மூலம் பரவுகின்றன.
# பூஞ்சைகள் ல்போர்கள் மூலம் தன் இனைத்தைப் பெருக்கிக் கொள்கிறது.
# பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்
# பெரும்புரட்சி – 1857
# பெனிசிலினை பிரிட்டன் நாட்டைச் சார்ந்த அலெக்ஸாண்டர் பிளெம்மிங் 1928-ல் கண்டுபிடித்தார்.
# பேகம் ஹஸ்ரத் மஹால் – லக்னோ
# பைரிகுலோரியா ஒரைசா – வெப்ப நோய் – நெல்
# முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் – மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
# லாயிட்ஸ் ஜார்ஜ் – பிரிட்டன்
# லூஃப்ட்வோஃப் – ஜெர்மனி
# வெர்செயில்ஸ் உடன்படிக்கை – ஜெர்மனி
# வெள்ளரி பல வண்ண வைரஸ் – வெள்ளரியில் பல வண்ண நோய்
# வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் – இராஜ கோபாலச்சாரியார்
# வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் – திப்புசுல்தான் மகன்கள்
# வைக்கம் அமைந்துள்ள இடம் – கேரளா
# வைரஸ் – சாதாரண சளி, போலியோ, மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், இன்புளுயென்சா – இவை காற்று, நீர் மற்றும் நேரடித் தொடர்பு, பாலியல்தொடர்பு மூலம் பரவுகின்றன.
# வைரஸ்ஸால் ஏற்படும் நோய்கள்
# ஜி.பி. பட்டாநாயக் (08 நவம்பர் 2002 முதல் 19 டிசம்பர் 2002) – ஒரிசா
# ஜெர்மன் உடன்படிக்கை – ஆஸ்திரியா
# ஸ்வதிகா – நாசி சின்னம்
சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – ராஜராம் மோகன்ராய்
சனி, 25 ஆகஸ்ட், 2018
TRB_TET_TNPSC
#TRB_TET_TNPSC
12 வகுப்பு தமிழ் பாடத்தில் முக்கிய
வினாக்கள்
1. சிற்றன்னை என்பதன் பொருள் :கையேயி
2. பதி என்பதன் பொருள் : ஊர்
3. மாயவன் பொருள் :திருமால்
4. பலவகை வண்ணமும் மனமும் நிறைந்த
மலர்கள் தொடுப்பது :கதம்பம்
5. கதம்பம் என்பது கலம்பகமாக திரிந்தது
என சொன்னது : உ வே சா
6. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் :நந்தி
கலம்பாகம்
7. முக்கூடர் பள்ளு எந்த இறைவன் மீது
பாடப்பட்டது :அழகர்
8. சைவ வைணவங்களை இணைக்கும் நூல் :
முக்கூடர்பள்ளு
9. பாஞ்சாலி சபதம் எத்தனை சறுக்கம்
கொண்டது :மூன்று
10. கலைமகள் பொருள் :பாரதி
11. இருபதாம் நூற்றண்டின் இலக்கிய
மறுமலர்ச்சி வித்திட்டது யார் :பாரதி
12. யாம் அறிந்த மொழிகளில் சிறந்த மொழி
தமிழ் என சொன்னவர் :பாரதி
13. வானிதாசன் பிறந்த ஊர் :வில்லியனுர்
14. தமிழ் பிரஞ்சு கையகர முதலி
வெளியிட்டவர் : வானிதாசன்
15. செவாலியர் விருது பெற்றவர் :
வானிதாசன்
16. இமயம் எங்கள் காலடியில் என்னும்
நூலை எழுதியது :மோகணரங்கள்
17. தாராபாரதி எழுதிய நூல் :புதிய
விடியல்
18. மரபு கவிதையின் வேர் பார்த்தவர்
:அப்துல் ரகுமான்
19. தண்டமில் ஆசான் :சீத்தலைச் சத்தணார்
20. ரட்சனியம் பொருள் :ஆன்ம ஈடேர்ரம்
21. காசினி பொருள் :உலகம்
22. தொல்காப்பிம் : 3 அதிகாரம் 27 இயல்கள்
1610 நூற்பா
23. சிலப்பதிகாரம் காண்டம் 30 காதை 5001
வரி
24. மணிமேகலை :30 காதை 4755 வரி
25. தேம்பாவனி காண்டம் 36படலம் 3615
பாடல்
26. கம்பராமாயணம் :6 காண்டம் 118 படலம் 10589
பாடல்
27. சீவக சிந்தாமணி : 13 இலம்பகம் 3145 பாடல்
28. ராவண காவியம் :5 காண்டம் 57 படலம் 3100
விருத்தம்
29. பெரிய புராணம் :2 காண்டம் 13 சறுக்கம்
4286 பாடல்
30. ஏசுகாவியம் :149 அதிகாரம் 810 விருத்தம்
2346 அகவடி
உண்ணும் உணவுகளின் தமிழ் பட்டியல்.#
#உண்ணும் உணவுகளின் தமிழ்
பட்டியல்.#
சப்பாத்தி----------------கோந்தடை
புரோட்டா---------------புரியடை
நூடுஸ்-------------------குழைமா
கிச்சடி------------------காய்சோறு,
காய்மா
கேக்--------------------கட்டிகை,
கடினி
சமோசா----------------கறிப்பொதி,
முறுகி
பாயசம்-----------------பாற்கன்னல்
சாம்பார்--------------
பருப்புக்குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி-----------------தோய்ச்சி,
மாவேச்சி
பொறை----------------வறக்கை
கேசரி----------------செழும்பம்,
பழும்பம்
குருமா----------------கூட்டாளம்
ஐஸ்கிரீம்----------------பனிக்குழம்பு
சோடா------------------காலகம்
டீ------------------------தேநீர்
சட்னி--------------------அரைப்பம்,
துவையல்
கூல்ட்ரிங்க்ஸ்----------குளிர்
குடிப்பு
பிஸ்கட்----------------ஈரட்டி,
மாச்சில்
போண்டா--------------உழுந்தை
சர்பத்------------------நறுமட்டு
சோமாஸ்---------------பிறைமடி
பன்--------------------மெதுவன்
ரோஸ்ட்----------------முறுவல்
லட்டு--------------------கோளினி
ஃப்ரூட் சாலட்---------பழக்கூட்டு
ஜாங்கிரி----------------முறுக்கினி
ரோஸ் மில்க்-----------முளரிப்பால்
காபி--------------------குழம்பி
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?
தினமணியின் தலையங்கம்...
ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?
முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.
ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?
இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?
அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.
மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?
மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.
தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?
ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.
அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.
திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன் கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.
ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.
நன்றி : தினமணி
வியாழன், 23 ஆகஸ்ட், 2018
தமிழ் எண்கள்.மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது.
*#தமிழ் எண்கள்*
1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo
81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo
91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo
101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo
மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழகத்தில் தமிழர்களே இல்லை..
----------------------------
உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக ஆங்கிலேயனை அலறவிட்ட குயிலி!
ஆங்கிலேயரை கதிகலங்கச்செய்த “தியாக வீரத்திருமகள் குயிலி”– மறைக்கப்பட்ட வரலாற்றுநாயகி
சிவகங்கையில் அத்துமீறி உள்நுழைந்த ஆங்கிலேய படைகளுடன், மருது சகோதரர்களின் துணையுடன்
வீரமங்கை வேலுநாச்சியார் போர் புரிந்துகொண்டிருந்தார். அந்த போரில் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலு நாச்சியார் மற்றும் மருது சகோத்தரர்களின் படைகள் பக்கம் தோல்வி உறுதியாகிக்கொண்டிருந்தது
அந்த நிலையில் அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தது.
அப்போது சட்டென ஒருஉருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தார்.
அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச்சிதற அந்த உருவ மும் வெடித்து சிதறியது ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
ஆங்கிலே யரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடி த்துச் சிதறிய அந்த உருவம்தான் “தியாக வீரத்திருமகள் குயிலி” இவரே உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக போற்றப்பட வேண்டியவர் .
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018
கம்பெனி பெயர்கள்-விளக்கங்கள்
#கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்!.....
கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும்.....
சில சுவாரஸ்யமானவை:
* Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo.....
Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.
* Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.....
* ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler)......
* STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV......
* ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India......
* Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.......
* COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research......
* VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege.......
* Wipro- ன் விரிவாக்கம் Western India Products......
* googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது......
* MICROcomputer SOFTware தான் MicroSoft....
முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் – நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.....
* IBM-ன் விரிவாக்கம் International Business Machines......
* Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937.....
ஆனால்Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.....
* HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce.....
* HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited.....
* MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory......
* TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited......
* Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்......
* Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது......
* Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது......
* KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு....
அதாவது
K stands for Klynveld
P is for Peat
M stands for Marwick
G is for Goerdeler.....
* Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.....
* இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து....
அது தான் இன்றைய Toshiba.....
* நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP.....
* Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.....
கூடுதல் பாடம் நடத்தினால் புத்தகங்கள் பறிமுதல்:உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
திங்கள், 20 ஆகஸ்ட், 2018
பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.
கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு, அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.
தமிழகம் முழுவதும், சாதாரண ரேஷன் கார்டுகள் மாற்றப்பட்டு, கையடக்க ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண்ணுடன், இணைக்கப்பட்ட, ஒரு கோடியே 96 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், ரேஷன் கடைகளில் தற்போது, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு, பயோமெட்ரிக் ரேஷன் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே, பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.
ஆதார் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே அனைவரது கைவிரல் ரேகையும், அரசு வசம் உள்ளது. அதனால் ஸ்மார்ட் கார்டில், பெயர் இடம்பெற்றுள்ளவர்களில் ஒருவரது கைவிரல் ரேகை பதிந்தால் மட்டுமே பொருள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால், அனைவரது கைவிரல் ரேகையும், பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கமுடியும். தவறான நபர்களுக்கு, ரேஷன் பொருள் சென்றடைவது தடுக்கப்படும்.
பயோமெட்ரிக் கருவிகள் கொள்முதல் பணிகள் துவங்கியுள்ளன. செப்டம்பர் மாத இறுதியில் பயோமெட்ரிக் முறை, படிப்படியாக அறிமுகமாகவுள்ளதாக பொதுவினியோகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
SPD PROC - SWACHHTA PAKHWADA - அனைத்து பள்ளிகளிலும் செப். 1 முதல் 15 வரை தூய்மை நிகழ்ச்சிகள் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் - நாள்தோறும் நிகழ்ச்சிகளின் பட்டியல் -
ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018
தொடக்க பள்ளி கல்விக்கு வருகிறது ஆபத்து
தொடக்க பள்ளி கல்விக்கு வருகிறது ஆபத்து
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்க, மற்றும் நடுநிலைபள்ளிகளில்பயிலும் மாணவர்களை தேர்வில் பெயில் செய்ய முடியாது.
ஆனால், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மேல்நிலை கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கவும் இந்த ஷரத்தை நீக்க தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முன்வந்துள்ளது.இந்த சட்டத்திருத்தம் மூலம் மாணவர்களை பெயில் ஆக்க வேண்டும் என்பது நோக்கம் அல்ல, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்வில் தோல்வியடையும் மாணவன்2 மாத பயிற்சி பெற்று உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இச்சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலும், 1ம் வகுப்புமுதல் 8ம் வகுப்பு வரை எக்காரணம் கொண்டும் மாணவர்களை பெயில் ஆக்கக்கூடாது என கல்வி பாதுகாப்புஇயக்கம் வலியுறுத்தி உள்ளது.*இதுதொடர்பாக பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நடராஜ் கூறியதாவது*5 மற்றும் 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை பெயில் ஆக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்திருத்தம் உள்ளது. இதை, தமிழக அரசு ஏற்கக்கூடாது. இது பள்ளி மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழி வகுத்துவிடும்.