உங்கள் மொபைல் போனை யாரிடமும் தர வேண்டாம்!
உங்கள் மொபைல் போனை நண்பர்களிடமோ,உறவினர்களிடமோ,எதற்காகவும் தரவேண்டாம்.சந்தேகம் இருந்தால் கேட்டு தெளிவு பெறுங்கள்.அல்லது உங்கள் சந்தேகங்களை தீர்க்க கூகுள்,யூ டியூப் ஐ பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.சமீபத்திய நிகழ்வு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.சகோதரி iஉறவு பெண்ணின் மொபைலை பார்த்துவிட்டு தருவதாகக் கூறி ட்ராக்வியூ ஆப்பை இன்ஸ்டால் செய்து விட்டார்.ட்ராக்வியூ ஆப் மூலம் அந்த மொபைலின் செயல்பாடுகளை தன் மொபைல் மூலம் கண்காணித்து அந்த பெண் கணவருடன் பேசிய அந்தரங்க உரையாடல், அனுப்பி அவரின் படங்கள், வீடியோக்களை தன்மொபைலில் ரெகார்ட் பண்ணி பின் அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டியுள்ளார்.தன் சொந்த சகோதரியின் மொபைலையும் கண்காணித்து ரெகார்ட் செய்து லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ள அவலமும் நடந்துள்ளது.எனவே மொபைலில் தேவையற்ற ஆப் கள் இருந்தால் அன் இன்ஸ்டால் செய்யுங்கள்.மொபைலை யாரிடமும் தர வேண்டாம்.
புதன், 1 ஆகஸ்ட், 2018
Home »
» உங்கள் மொபைல் போனை யாரிடமும் தர வேண்டாம்!
0 comments:
கருத்துரையிடுக