செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
Home »
» காலதாமத அரசாணைகள்!அலைகழிப்பு குமுறல்!
காலதாமத அரசாணைகள்!அலைகழிப்பு குமுறல்!
நேற்று கேரள மக்களுக்கு உதவ ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.ஏறக்குறைய அனைவரின் ஊதியப் பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.ஒரு வாரம் முன்னதாக ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தால் அரசூழியர் அனைவரும் ஒரு நாள் ஊதியம் வழங்கியிருப்பர்.இது போல கடைசி நேரத்தில் பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிட்டு போனஸ் பொங்கலுக்கு பல பேருக்கு கிடைக்கவில்லை.அது போல அகவிலைப் படி அரசாணை மாத கடைசியில் வெளியிட்டு அலைகழிப்பு செய்வது.இனி இது போன்ற அரசாணைகள் உரிய காலத்தில் வெளியிடப்பட்டால் அதன் பலன் சிரமமில்லாமல் முழுமையாக உரியவர்களை போய் சேரும்.பெரும்பாலான கோப்புகள் கடைசி நேரத்தில் ஒப்புதல் அளிக்கப்படுவதே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக