நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக ஆங்கிலேயனை அலறவிட்ட குயிலி!

உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக ஆங்கிலேயனை அலறவிட்ட குயிலி

ஆங்கிலேயரை கதிகலங்கச்செய்த‌ “தியாக வீரத்திருமகள் குயிலி”– மறைக்க‍ப்பட்ட‍ வரலாற்றுநாயகி

சிவகங்கையில் அத்துமீறி உள்நுழைந்த ஆங்கிலேய படைகளுடன், மருது சகோதரர்களின் துணையுடன்

வீரமங்கை வேலுநாச்சியார் போர் புரிந்துகொண்டிருந்தார். அந்த போரில் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலு நாச்சியார் மற்றும் மருது சகோத்த‍ரர்களின் படைகள் பக்க‍ம் தோல்வி உறுதியாகிக்கொண்டிருந்தது

அந்த நிலையில் அரண்மனை ஆயுதக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தது.

அப்போது சட்டென ஒருஉருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தார்.

அப்படியே அந்த ஆயுதக்கிடங்கு வெடித்துச்சிதற அந்த உருவ மும் வெடித்து சிதறியது ஆங்கிலேயர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

ஆங்கிலே யரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும் அழிக்கப்பட்டது அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடி த்துச் சிதறிய அந்த உருவம்தான் “தியாக வீரத்திருமகள் குயிலி” இவரே உலகின் முதல்பெண் தற்கொலை படை வீராங்கனையாக போற்ற‍ப்பட வேண்டியவர் .
Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support