நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.


அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் போட்டிகள் நடத்தி, அதில் தேர்வாகும் படங்களை நாசா, தனது காலாண்டரில் அச்சிட்டு வருகிறது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் – சந்திராமணி தம்பதியரின் மகன் தேன்முகிலன் வரைந்த படம் தேர்வு பெற்று, நாசாவின் காலண்டரில் இடம் பிடித்துள்ளது.

நாசா காலண்டரில் கால் பதித்த திண்டுக்கல் மாணவன்!
தேன்முகிலனின் ‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பிலான ஓவியம் தேர்வு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியை சேர்ந்த மாணவன் வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் போட்டிகள் நடத்தி, அதில் தேர்வாகும் படங்களை நாசா, தனது காலாண்டரில் அச்சிட்டு வருகிறது. இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் கலந்து கொண்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நடராஜன் – சந்திராமணி தம்பதியரின் மகன் தேன்முகிலன் வரைந்த படம் தேர்வு பெற்று, நாசாவின் காலண்டரில் இடம் பிடித்துள்ளது.
2019-ம் ஆண்டு காலண்டருக்கான ஓவியங்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில் 194 நாடுகளைச் சேர்ந்த 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் இறுதியாக 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில் பங்கேற்றதில் தேன்முகிலனின் ‘விண்வெளியில் உணவு’ என்ற தலைப்பிலான ஓவியம் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் மாத காலண்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஓவியப்போட்டியிலும் இந்த பள்ளி அனுப்பிய ஓவியம் தேர்வாகியிருந்தது குறிப்பித்தக்கது.

Share:

2018-2019 நிதியாண்டு வருமானவரி சந்தேகங்கள், விளக்கங்கள்.

2018-2019 நிதியாண்டு வருமானவரி சந்தேகங்கள், விளக்கங்கள்.



Share:

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பணி நீட்டிப்பு இல்லை என்பதற்கான அரசாணை!

பணி நீட்டிப்பு இல்லை என்பதற்கான அரசாணை!




Share:

புதன், 19 டிசம்பர், 2018

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

*அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

இவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும். தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், _அதற்கு இணையானவை_ என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.

ஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.

இந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி துறை தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

*தகுதியற்ற படிப்புகள் என்னென்ன?*

*பெரியார் பல்கலை:* எம்.காம்., - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், _எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது_.

*அழகப்பா பல்கலை:* எம்.எஸ்சி., 'இன்பர்மேஷன் டெக்னாலஜி' படிப்பு, _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை_

*சென்னை பல்கலை:* எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை_.

*பாரதியார் பல்கலை:* எம்.எப்.டி., என்ற, 'மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்' மற்றும் எம்.காம்., 'இன்டர்நேஷனல் வணிகம்' ஆகிய படிப்புகள், _எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை_.

*எம்.எஸ்சி.,* படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல_.

*பாரதிதாசன் பல்கலை:*
 எம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ - காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை_

*அண்ணாமலை பல்கலை:* எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், _எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை_.

*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை:* எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், _எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை_.

*அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்:* எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, _எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல_; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி - _எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது_.

இந்த பட்டியல்
 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர்,
அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள்
உட்பட பலருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

 Ref . *தினமலர் : டிசம்பர் 19,2018*
Share:

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ஓய்வூதியர் தினம்! ஓய்வூதியம் கருணையா?உரிமையா?

ஓய்வூதியர் தினம்! ஓய்வூதியம் கருணையா?உரிமையா?



Share:

வெள்ளி, 14 டிசம்பர், 2018

வருமான வரி கட்டுவோர்களுக்கு, அவர்களது ரீஃபண்ட் குறித்து வரும் இ-மெயில் அல்லது குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாமென்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அவசியம் படிக்கவும்

வருமான வரி கட்டுவோர்களுக்கு, அவர்களது ரீஃபண்ட் குறித்து வரும் இ-மெயில் அல்லது குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாமென்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வருமான வரித் துறையின் சார்பாக, வரி கட்டுவோருக்கு அவர்களது வருமான வரி தாக்கல் எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து அவ்வப்போது மெயில் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதுண்டு. அப்படி அனுப்பப்படும் மெயில் அல்லது குறுஞ்செய்தி வடிவில், வரி தாக்கல் செய்துள்ளவர்களுக்கு, ரீஃபண்டை திரும்பத் தருவதற்காக அவர்களது டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் சிவிவி எண் போன்றவற்றை அளிக்கும்படி மோசடி மெயில் மர்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகப் புகார் வந்துள்ளது. இப்படி டெபிட் கார்டு விவரங்களைக் கொடுப்பவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, வரி தாக்கல் செய்துள்ளவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக, வருமான வரித் துறை சார்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குறுஞ்செய்தியில், "வருமான வரி செலுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களுடைய டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் சிவிவி எண் போன்றவற்றைக் கொடுத்தால், உங்களுடைய ரீஃபண்டைச் செலுத்துகிறோம் என்றும் ஏதேனும் மெயில் அல்லது குறுஞ்செய்தி வந்தால் நம்ப வேண்டாம். வருமான வரித் துறையிலிருந்து இதுபோன்ற விவரங்களை எக்காரணத்தை முன்னிட்டும் கேட்பது கிடையாது. எனவே, உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் பெருகிவரும் இந்தக் காலத்தில் நாம்தான் மிகுந்த விழிப்புஉணர்வுடன் இருக்க வேண்டும்.
Share:

நலப்பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு இணைப்பு!

நலப்பள்ளிகள் அரசு பள்ளிகளுக்கு இணைப்பு!
Share:

வியாழன், 13 டிசம்பர், 2018

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்காத மருத்துவமனையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிகிச்சை பெற்றாலு ம் செல்லும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு !

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்காத மருத்துவமனையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிகிச்சை பெற்றாலு ம் செல்லும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு !
-----------------------------------------------------------------------------------------------------
மதுரை: 'மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் ஓய்வூதியர் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி, செலவு தொகையை நிராகரித்ததை ஏற்க முடியாது. தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை செல்லுாரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோதண்டராமன், மருத்துவமனையில் 2015ல் இடுப்பில் அறுவைச் சிகிச்சை நடந்தது. ஒரு லட்சத்து 7,690 ரூபாய் செலவானது. ஓய்வூதியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிகிச்சை கட்டணத்தை வழங்கக் கோரி தமிழக அரசிடம், அவரது மனைவி சாரதா விண்ணப்பித்தார்.

'காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை' என ஓய்வூதிய இயக்குனர், மதுரை கலெக்டர், மாவட்ட கருவூல அதிகாரி நிராகரித்தனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளையில் சாரதா மனு செய்தார்.

தனி நீதிபதி, 'சிகிச்சை கட்டணத்தை 9 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓய்வூதிய இயக்குனர், கலெக்டர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு உத்தரவு:
குடிமக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளில், மருத்துவ வசதி பெறும் உரிமை அடங்கியுள்ளது. அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற்றதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால், தொகையை வழங்க வேண்டியது அரசின் கடமை. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை எனக்கூறி நிராகரித்ததை ஏற்க
முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி
செய்கிறோம். 9 சதவீத வட்டி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
இவ்வாறு
உத்தரவிட்டார்.
Share:

புதன், 12 டிசம்பர், 2018

பெண் ஊழியருக்கு சம்பளம் தராததால், பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்

பெண்
ஊழியருக்கு சம்பளம் தராததால், பள்ளி கழிப்பறைகளை
சுத்தம் செய்யும்
தலைமை ஆசிரியர்


*பெண் ஊழியருக்கு சம்பளம் தராததால், பள்ளி கழிப்பறைகளை, தலைமை ஆசிரியரே சுத்தம் செய்து வருகிறார். இந்த தகவல், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பரவி, மாணவர்களையும், ஆசிரியர்களையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளது*



*துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளியிலும், உள்ளாட்சி துறை வழியாக, கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தற்காலிக ஊழியர் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான சம்பளம், பள்ளி கல்வி துறையில் இருந்து, வட்டார வளர்ச்சி அதிகாரியான, பி.டி.ஓ.,க்கள் வழியாக வழங்கப்படுகிறது*


*இந்த திட்டத்தில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, கல்குறிச்சியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில், பாப்பா, 64, என்ற மூதாட்டி, துப்புரவு பணி செய்து வந்தார். இவருக்கு, மாதம், 2,250 ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. சில மாதங்கள் வரை சம்பளம் வழங்கிய, பி.டி.ஓ., அலுவலகம், திடீரென நிறுத்தி விட்டது*


*வாய் பேச முடியாத மகளையும், மூளை வளர்ச்சி குறைந்த மகனையும் வைத்துள்ள, அந்த பெண்ணால், சம்பளம் இன்றி, வாழ்க்கையை நகர்த்த முடியவில்லை. அதனால், அவர் பணியில் இருந்து நின்று விட்டார். இதையடுத்து, 250 மாணவ - மாணவியர் படிக்கும், அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள, ஆண், பெண் கழிப்பறைகளை, பள்ளி தலைமை ஆசிரியர், சேவியர் ஆரோக்கியதாஸ், சுத்தம் செய்கிறார்*


*இது குறித்து, சேவியர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது: துப்புரவு செய்யும் மூதாட்டிக்கான சம்பளம், பள்ளி கல்வி துறையில் இருந்து, ஊரக வளர்ச்சி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பி.டி.ஓ., அலுவலகத்தில், ஜூன் முதல் சம்பளம் வழங்கவில்லை. அதனால், அந்த பெண், வேலைக்கு வரவில்லை. இதையடுத்து, கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் வீசியது*


*ஆசிரியர்களையோ, மாணவ - மாணவியரையோ, துப்புரவு பணி செய்ய விட முடியாது. அவ்வாறு கூறினால், அது, வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, தினமும் நானே, இந்த பணியை செய்கிறேன். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டு, துப்புரவு பணியாளருக்கு சம்பளம் கிடைக்கட்டும் என்ற, நல்ல நோக்கத்தில், புகைப்படத்தை வெளியிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
Share:

திங்கள், 10 டிசம்பர், 2018

10/12/2018/உயர்நீதிமன்ற நிகழ்வு முழு தகவல்!

10/12/2018/உயர்நீதிமன்ற நிகழ்வு முழு தகவல்!
 உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர்கள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் என்ன செய்து கொண்டு வந்துள்ளீர்கள் cps குறித்து என முடிவெடுத்து உள்ளீர்கள் என கேட்டார்
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் cps என்பது நாடு முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை அதன் மீது ஒரு அறிக்கையை பெறப்பட்டுள்ளது அது குறித்து அரசு இன்னும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது என்று கூறினார் அதற்கான அவகாசம் நீதியரசர்கள் கேட்டார்கள் ஆறு வார காலம் வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்கப்பட்டது அதன் பின்னர் ஊதிய முரண்பாடுகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை கேட்டார் அப்போது அரசு வழக்கறிஞர் ஊதிய முரண்பாட்டிற்கான கமிட்டியின் அறிக்கை இன்னும் பெறவில்லை என்பதை கூறினார் எப்போது பெறப்படும் என்று நீதியரசர் வினவினார்கள்
பின்னர் நீதிபதிகளே சித்தி குழுவில் 21 நிலுவைத் தொகையை பரிசீலித்து அதோடு ஊதிய முரண்பாடுகளை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பித்து அதன் மீதான அரசாங்க நடவடிக்கையை வரும் ஜனவரி 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் அதே ஜனவரி 5ஆம் தேதி cps குறித்த அரசினுடைய நடவடிக்கை குறித்த அறிக்கையைபின் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் அதனடிப்படையில் ஜனவரி 7-ம்தேதி நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறியிருக்கிறார்கள் அந்த அடிப்படையிலே ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிகூடி நாலு மணிக்கு கூடி கலந்து பேசி முடிவுகளை அறிவிக்கும்
Share:

சனி, 8 டிசம்பர், 2018

இளையராஜாவின் ராயல்டி கோரிக்கையால், பல குடும்பங்கள் வாழும்!" - தினா-_--வெளிவராத உண்மைகள்

இளையராஜாவின் ராயல்டி கோரிக்கையால், பல குடும்பங்கள் வாழும்!" - தினா

இந்த உலகத்திலேயே அதிகமான பாடலுக்கு இசையமைத்தவர், ராஜா சார்தான். எந்த மொழியிலும் இப்படியான ஒரு இசைக் கலைஞர் இல்லை. 1000-க்கும் அதிகமான படங்களுக்கு, அதில் 5000-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார், இளையராஜா சார்.  இப்படியான ஒருவர், எங்க சங்கத்தின் உறுப்பினர்னு நினைக்கும்போதே, பெருமையா இருக்கு. முக்கியமா, சங்கத்தின் தலைவரா நான் இருக்கும்போது, ராஜா சார் தன்னோட ராயல்டி உரிமை, சங்கத்திற்குச் சேரும்னு சொல்லியிருக்கிறது, சந்தோஷமா இருக்கு.
ராயல்டி விஷயத்தைப் பொறுத்தவரை, இளையராஜா உள்பட பெரும்பாலான இசையமைப்பாளர்கள் IPRS (Indian performing right society) என்ற அமைப்பைத்தான் நம்பிக்கிட்டு இருந்தோம். 1967-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், இந்தி, தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் இருந்தாங்க. இந்த அமைப்பு, உறுப்பினர்களாக இருக்கும் இசையமைப்பாளர்களின் பாடல்களை யார் யார் எங்கெங்கு ஒலி/ஒளிபரப்பு செய்றாங்கனு கண்காணிக்கணும். ஆனா, பாலிவுட் சினிமாவைத் துல்லியமாகக் கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமான காப்புரிமைத் தொகையைப் பெற்றுத் தரும் இந்த அமைப்பு, தமிழ் சினிமாவை மோசமாகவே நடத்தியது. உதாரணத்துக்கு, 5 படங்களுக்கு இசையமைத்த பாலிவுட் இசையமைப்பாளருக்குக் கிடைக்கும் தொகைதான், ஆயிரம் படங்களுக்கு வேலை பார்த்த தமிழ் இசையமைப்பாளருக்கும் கிடைக்கும். இதை எதிர்த்து, IPRS அமைப்பின் சேர்மன் ஜாவேத் அக்தர் என்பவருடன் கருத்து மோதலாகி, இந்த அமைப்பில் இருந்தே வெளியேறினார், இளையராஜா. அவர் கேட்டதில் என்ன தப்பு இருக்கு?!

நியாயப்படி, இளையராஜா சார் செய்தது நல்ல காரியம். இதனால் பல குடும்பங்கள் வாழும். பலரும் அவர் கேட்கிற ராயல்டி தொகையை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. சமூக வலைதளங்களில் உண்மை தெரியாம, கலாய்ச்சுக்கிட்டு இருந்தாங்க. அவரைப் பற்றி தப்பா பேசுறது, எனக்குக் கவலையா இருக்கு. இனிமேலாவது, அவர் ஏன் அப்படி ஒரு வீடியோவில் தோன்றிப் பேசினதுக்குப் பின்னாடி இருக்கிற பொதுநலத்தைப் புரிஞ்சுக்கோங்க." என்று முடித்த தினாவிடம், சில கேள்விகள்.

"அந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன், இளையராஜா ராயல்டி தொகை சம்பந்தமா உங்க சங்கத்தில் பேசினாரா?"

"எங்ககிட்ட பேசி முடிவெடுத்த பிறகுதான், அவர் வீடியோவில் பேசினார். சங்க உறுப்பினர்கள் எல்லோரும் கலந்து பேசி, இளையராஜா கொடுத்த காப்புரிமை விஷயத்தை விவாதித்து, ஏற்றுக்கொண்டு, ஒரு அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கை வெளியான அடுத்தநாள்தான் இளையராஜா சார் வீடியோவில் பேசி, நியாயமாகக் கிடைக்க வேண்டிய ராயல்டியைக் கேட்டார்."

இளையராஜா சங்கத்துக்கு அறிவித்த காப்புரிமை எந்த வழிகளில் சங்க உறுப்பினர்களுக்குச் சேரும்?"

"சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்குத் தேவையான பண உதவி, மருத்துவ உதவி, பென்ஷன் எனப் பல வழிகளில் இதைப் பயன்படுத்துவோம். ராஜா சார் கொடுத்த ராயல்டி தொகையை சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்துவோம்." 

Share:

செவ்வாய் கிரகத்தில் வினோத ஒலிகள்! நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு

நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது.

அந்த விண்கலம் மே 5-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணித்து உள்ளது. இந்த விண்கலம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒலியை கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

காற்றின் அதிர்வலைகளை இன்சைட் விண்கலம் ஒலியாக பதிவு செய்துள்ளது. அந்த கிரகத்தின் வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி, 10 முதல் 25 mph வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசாவின் புரூஷ் பெனர்ட் கூறுகையில், ‘நாங்கள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள இன்சைட் அதிர்வலைகளையும், ஒலியையும் பதிவு செய்யும் தொழில்நுட்பம் கொண்டது.

இந்த மாதிரியான சின்ன சின்ன சத்தங்களும், கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். தற்போது இன்சைட் பதிவு செய்து அனுப்பியுள்ள ஒலியை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு எதிர்பாராத விருந்து தான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒலியை முதன்முதலாக கேட்டுள்ளதாகவும், இது மிக சாதாரணமான ஒலியாக இல்லை என்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே இன்சைட் விண்கலம் முக்கியமான, அதிசயத்தக்க வேலையை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Share:

பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு


பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

Share:

ஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு._அனைவருக்கும் பகிரவும்


ஜவ்வாது மலையில் ஆசிரியா் பணி: தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.


ஜவ்வாது மலை வனத்துறை பள்ளியில் காலியாக உள்ள 8 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு


 திருப்பத்தூா் வனக்கோட்டம், ஜவ்வாதுமலையில் உள்ள வனத்துறை பள்ளிகளில் 8 இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன
இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஜவ்வாது மலையில் தங்கி மாணவா்களுக்கு கல்வி கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்களை திருப்பத்தூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, அதைப் பூா்த்தி செய்து மாவட்ட வன அலுவலா், திருப்பத்தூா் கோட்டம், அரசு தோட்டம், திருப்பத்தூா் - 635601 வேலூா் மாவட்டம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ வரும் 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு முடித்தவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share:

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் குழப்பம்*





தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் குழப்பம்*


*🛑பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்களுக்கு, வழிகாட்டுதல் இல்லாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை காக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்*


*🛑தமிழகத்தில், 2017 - 18ம் கல்வியாண்டில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முறை அமலானது*


*🛑முதல் முறையாக, அத்தேர்வு எழுதிய, ஒன்பது லட்சம் பேரில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தோல்வியை தழுவினர். அவர்கள், பிளஸ் 2 படிக்கலாம் என அறிவிக்கப்பட்டது*


 *🛑ஜூனில் நடந்த சிறப்பு துணைத்தேர்வில், பிளஸ் 1 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், 20 சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறவில்லை*


 *🛑இந்நிலையில், 'பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள், உயர்கல்விக்கு எடுத்துக்கொள்ளப்படாது' என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்*


*🛑நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது*


 *🛑ஆனால், கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத பிளஸ் 1 மாணவர்கள், மீண்டும், அப்பாடங்களை எழுதி தேர்ச்சி பெறுவது குறித்து, எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை*


 *🛑வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வில், பங்கேற்க அனுமதிக்கப்படும்பட்சத்தில், தேர்வு கட்டணம், விண்ணப்பம் ஆகியவை பெறப்பட்டிருக்க வேண்டும். எதுவும் பெறாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்*


*🛑இதுகுறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது*


*🛑பிளஸ் 1 பொதுத்தேர்வில், அரசின் நிலைப்பாடு, ஆரம்பம் முதல், குழப்பத்திலேயே தொடர்கிறது. தேர்ச்சி பெற தவறியவர்கள், நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர்*


 *🛑ஆனால், பிளஸ் 1 தவறிய பாடங்களை, தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டுமா, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, பிளஸ் 1 தேர்ச்சி பெறாமல் இருப்பின், உயர்கல்வியில் சேர முடியுமா என்ற கேள்விகளுக்கு, கல்வித்துறை விளக்கம் அளிக்கவில்லை. இப்போதிருந்தே, தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும் தயாரானால் தான், மாணவர்களுக்கும் எளிதாக இருக்கும்*


 *🛑அதனால், பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்களை, கல்வித்துறை, உடனடியாக வெளியிட வேண்டும். அப்போது தான், மாணவர்களின் எதிர்காலம் பாழாவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்*



*SOURCE DINAMALAR WEBSITE*
Share:

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.ஜேக்டோ ஜியோ வழக்கு விசாரணையில் வெளியாகுமா?

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.ஜேக்டோ ஜியோ வழக்கு விசாரணையில் வெளியாகுமா?

Share:

வியாழன், 6 டிசம்பர், 2018

நிதியுதவி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை போலிBEO க்கு சிறை தண்டனை

அரசு நிதியுதவி பள்ளி மோசடிக்கு உடந்தையாக இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் கடந்த 2015ல் மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் அப்துல்ஹக் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடந்த 2012 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை போலியாக  கணக்கில் காட்டி, தலைமை ஆசிரியர் அரசு நிதியுதவி பெற்று  மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது

விசாரணையில், வாலாஜா கிழக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூங்கோதை(47) இதற்கு உடந்தையாக  இருந்ததும் ெதரிந்தது. புகாரின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2015 ஆகஸ்ட் 27ல் வழக்குப்பதிவு செய்தனர்.



இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரி விசாரித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதைக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். 
Share:

SBI Zero Balance Account: அந்த 3 திட்டங்கள் என்னென்ன தெரிந்துக் கொள்வோமா?


SBI Zero Balance Account: அந்த 3 திட்டங்கள் என்னென்ன தெரிந்துக் கொள்வோமா?

1. சேலரி அக்கவுண்ட் :
நீங்கள் பணிப்புரியும் அலுவலகத்தில் மாத சம்பளம் வழங்க தொடங்கப்படும்  சேலரி அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை கிடையாது. மேலும், இலவச ஆன்லைன் பேங்கிங், ஏ.டி.எம் கார்ட், ஜாயின்ட் அக்கவுன்ட்டுக்கு கூடுதல் ஏ.டி.எம் கார்டு, எஸ்.பி.ஐ பவர் வசதி, இலவச கசோலைகள் வழங்கப்படும்.
தொடர்ந்து 3 மாதங்கள் ஊதியம் கணக்கில் டெபாசிட் ஆகவில்லை என்றால், இந்த கணக்குக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் திரும்பப் பெறப்படும்.
2. பேசிக் சேமிப்பு கணக்கு:
ஏழை மக்கள் பயன்பெற தொடங்கப்பட்ட கணக்கு பேசிக் சேமிப்பு கணக்கு ஆகும். இதில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ள நீங்கள் கே.ஒய்.சி சான்றுகளை வழங்க வேண்டும். இந்த கணக்கை தொடங்குவோருக்கு இலவசமாக ரூ-பே ஏ.டி.எம் கார்டு வழங்கப்படும்.  NEFT/RTGS சேவை மூலம் கட்டணம் இன்றி பணம் அனுப்பவும் பெறவும் முடியும். மினிமம் பேலன்ஸ் பிரச்சனை அறவே இல்லை
இந்த கணக்கு திறக்க நினைப்பவர்களுக்கு, வேறு சேமிப்பு கணக்குகள் இருக்கக் கூடாது. அப்படியே இருந்தால் 30 நாட்களுக்குள் அதை மூட வேண்டும்.
3. சிறிய டெபாசிட் கணக்குகள்:
கே.ஒய்.சி சான்றுகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த கணக்கை தொடங்கலாம். ஆனால் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கே.ஒய்.சி சான்றுகள் சமர்ப்பித்த பிறகு பேசிக் சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் தான்ன். ஆனால் அதிகபட்சமாக 50 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
Share:

செவ்வாய், 4 டிசம்பர், 2018

எஸ்பிஐ வங்கி சலுகைகள்

எஸ்பிஐ சலுகைகள்:

1. வீட்டுக்கடன்:

எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு 8.30 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. இதில் பெண்களுக்கு அதிகச் சலுகைகள் உண்டு.
ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றால் குறைந்தபட்சம் 855 முதல் 847 ரூபாய் தவணையில் கடனை அடைக்கலாம். கடன் பெறும் தொகையில் 0.35% அல்லது 10,000 ரூபாயுடன் ஜிஎஸ்டி 18 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 2000 ரூபாய் உடன் ஜிஎஸ்டி செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கும்.

2. பெர்சனல் லோன்:

எஸ்பிஐ வங்கி வழங்கும் இந்தக் கடன் பேக்கேஜ் ஆனது 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் கடன் அளிக்கும். 2 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாகக் கடன் பெறும் போது 0.5 சதவீதத்தை வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படும். என்ன தொழிலிற்காகக் கடன் பெறுகிறார்கள் என்பதைப் பொருத்துச் சலுகைகள் மாறும்.

3. பிக்சட் டெபாசிட் :

3. 1 கோடிக்கும் கீழ் எஸ்பிஐ வங்கியில்  பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு சென்ற வாரம் .05 முதல் 0.10 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

4. சிறிய டெபாசிட் கணக்குகள்:

கே.ஒய்.சி சான்றுகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த கணக்கை தொடங்கலாம்.கே.ஒய்.சி சான்றுகள் சமர்ப்பித்த பிறகு பேசிக் சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் தான்ன். ஆனால் அதிகபட்சமாக 50 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

Share:

பான் கார்டுக்கு புதிய விதி மாற்றங்கள்!

பான் கார்டு என்றால் பலரும் பயந்து பின்வாங்கும் நிலை போய், இப்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது. பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது. இப்போதும் முக்கிய மாற்றங்களை செய்துள்ளத. இந்த மாற்றங்கள் இன்று முதல்  அமலுக்கு வருகிறது. வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் 10 இலக்க எண் ெகாண்ட பான் கார்டை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிமாற்றம் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம். மேலும் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலே இப்போதெல்லாம் பான் கார்டு கேட்பது வழக்கமாகி விட்டது.

புதிய 5 விதிகள்
1 குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க  முடியும். அதுபோல,  குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டு வழங்கப்படும். இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், ேம மாதம் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதிக்கப்படாது.
2 நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், டிரஸ்டி, எழுத்தாளர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள் என்று பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
3 மொத்த விற்றுமுதல், விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இனங்களில் நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தாலும், பான் கார்டு முக்கியம்.
4 கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான்கார்டில் தந்தை பெயரை குறிப்பிட தேவையில்லை.
5 வங்கி கணக்கு துவக்கவோ, வருமான வரி ரிடர்ன் பூர்த்தி செய்யவோ பான் கார்டு எண் கட்டாயம்.


Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support