10/12/2018/உயர்நீதிமன்ற நிகழ்வு முழு தகவல்!
உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர்கள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் என்ன செய்து கொண்டு வந்துள்ளீர்கள் cps குறித்து என முடிவெடுத்து உள்ளீர்கள் என கேட்டார்
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் cps என்பது நாடு முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை அதன் மீது ஒரு அறிக்கையை பெறப்பட்டுள்ளது அது குறித்து அரசு இன்னும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது என்று கூறினார் அதற்கான அவகாசம் நீதியரசர்கள் கேட்டார்கள் ஆறு வார காலம் வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்கப்பட்டது அதன் பின்னர் ஊதிய முரண்பாடுகள் குறித்து அரசின் நிலைப்பாட்டை கேட்டார் அப்போது அரசு வழக்கறிஞர் ஊதிய முரண்பாட்டிற்கான கமிட்டியின் அறிக்கை இன்னும் பெறவில்லை என்பதை கூறினார் எப்போது பெறப்படும் என்று நீதியரசர் வினவினார்கள்
பின்னர் நீதிபதிகளே சித்தி குழுவில் 21 நிலுவைத் தொகையை பரிசீலித்து அதோடு ஊதிய முரண்பாடுகளை பரிசீலித்து அறிக்கை சமர்ப்பித்து அதன் மீதான அரசாங்க நடவடிக்கையை வரும் ஜனவரி 5ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் அதே ஜனவரி 5ஆம் தேதி cps குறித்த அரசினுடைய நடவடிக்கை குறித்த அறிக்கையைபின் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள் அதனடிப்படையில் ஜனவரி 7-ம்தேதி நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று கூறியிருக்கிறார்கள் அந்த அடிப்படையிலே ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிகூடி நாலு மணிக்கு கூடி கலந்து பேசி முடிவுகளை அறிவிக்கும்
0 comments:
கருத்துரையிடுக