நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

வெள்ளி, 14 டிசம்பர், 2018

வருமான வரி கட்டுவோர்களுக்கு, அவர்களது ரீஃபண்ட் குறித்து வரும் இ-மெயில் அல்லது குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாமென்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அவசியம் படிக்கவும்

வருமான வரி கட்டுவோர்களுக்கு, அவர்களது ரீஃபண்ட் குறித்து வரும் இ-மெயில் அல்லது குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாமென்று வருமான வரித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வருமான வரித் துறையின் சார்பாக, வரி கட்டுவோருக்கு அவர்களது வருமான வரி தாக்கல் எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து அவ்வப்போது மெயில் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதுண்டு. அப்படி அனுப்பப்படும் மெயில் அல்லது குறுஞ்செய்தி வடிவில், வரி தாக்கல் செய்துள்ளவர்களுக்கு, ரீஃபண்டை திரும்பத் தருவதற்காக அவர்களது டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் சிவிவி எண் போன்றவற்றை அளிக்கும்படி மோசடி மெயில் மர்றும் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகப் புகார் வந்துள்ளது. இப்படி டெபிட் கார்டு விவரங்களைக் கொடுப்பவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, வரி தாக்கல் செய்துள்ளவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக, வருமான வரித் துறை சார்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குறுஞ்செய்தியில், "வருமான வரி செலுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களுடைய டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் சிவிவி எண் போன்றவற்றைக் கொடுத்தால், உங்களுடைய ரீஃபண்டைச் செலுத்துகிறோம் என்றும் ஏதேனும் மெயில் அல்லது குறுஞ்செய்தி வந்தால் நம்ப வேண்டாம். வருமான வரித் துறையிலிருந்து இதுபோன்ற விவரங்களை எக்காரணத்தை முன்னிட்டும் கேட்பது கிடையாது. எனவே, உங்களுடைய டெபிட் கார்டு விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகள் பெருகிவரும் இந்தக் காலத்தில் நாம்தான் மிகுந்த விழிப்புஉணர்வுடன் இருக்க வேண்டும்.
Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support