SBI Zero Balance Account: அந்த 3 திட்டங்கள் என்னென்ன தெரிந்துக் கொள்வோமா?
1. சேலரி அக்கவுண்ட் :
நீங்கள் பணிப்புரியும் அலுவலகத்தில் மாத சம்பளம் வழங்க தொடங்கப்படும் சேலரி அக்கவுண்டில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை கிடையாது. மேலும், இலவச ஆன்லைன் பேங்கிங், ஏ.டி.எம் கார்ட், ஜாயின்ட் அக்கவுன்ட்டுக்கு கூடுதல் ஏ.டி.எம் கார்டு, எஸ்.பி.ஐ பவர் வசதி, இலவச கசோலைகள் வழங்கப்படும்.
தொடர்ந்து 3 மாதங்கள் ஊதியம் கணக்கில் டெபாசிட் ஆகவில்லை என்றால், இந்த கணக்குக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகள் திரும்பப் பெறப்படும்.
2. பேசிக் சேமிப்பு கணக்கு:
ஏழை மக்கள் பயன்பெற தொடங்கப்பட்ட கணக்கு பேசிக் சேமிப்பு கணக்கு ஆகும். இதில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ள நீங்கள் கே.ஒய்.சி சான்றுகளை வழங்க வேண்டும். இந்த கணக்கை தொடங்குவோருக்கு இலவசமாக ரூ-பே ஏ.டி.எம் கார்டு வழங்கப்படும். NEFT/RTGS சேவை மூலம் கட்டணம் இன்றி பணம் அனுப்பவும் பெறவும் முடியும். மினிமம் பேலன்ஸ் பிரச்சனை அறவே இல்லை
இந்த கணக்கு திறக்க நினைப்பவர்களுக்கு, வேறு சேமிப்பு கணக்குகள் இருக்கக் கூடாது. அப்படியே இருந்தால் 30 நாட்களுக்குள் அதை மூட வேண்டும்.
3. சிறிய டெபாசிட் கணக்குகள்:
கே.ஒய்.சி சான்றுகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த கணக்கை தொடங்கலாம். ஆனால் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கே.ஒய்.சி சான்றுகள் சமர்ப்பித்த பிறகு பேசிக் சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் தான்ன். ஆனால் அதிகபட்சமாக 50 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
0 comments:
கருத்துரையிடுக