நமது இலட்சியம்!

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

சனி, 8 டிசம்பர், 2018

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் குழப்பம்*





தமிழகத்தில் பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் குழப்பம்*


*🛑பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்களுக்கு, வழிகாட்டுதல் இல்லாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை காக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்*


*🛑தமிழகத்தில், 2017 - 18ம் கல்வியாண்டில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முறை அமலானது*


*🛑முதல் முறையாக, அத்தேர்வு எழுதிய, ஒன்பது லட்சம் பேரில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தோல்வியை தழுவினர். அவர்கள், பிளஸ் 2 படிக்கலாம் என அறிவிக்கப்பட்டது*


 *🛑ஜூனில் நடந்த சிறப்பு துணைத்தேர்வில், பிளஸ் 1 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், 20 சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறவில்லை*


 *🛑இந்நிலையில், 'பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்கள், உயர்கல்விக்கு எடுத்துக்கொள்ளப்படாது' என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்*


*🛑நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது*


 *🛑ஆனால், கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத பிளஸ் 1 மாணவர்கள், மீண்டும், அப்பாடங்களை எழுதி தேர்ச்சி பெறுவது குறித்து, எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை*


 *🛑வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வில், பங்கேற்க அனுமதிக்கப்படும்பட்சத்தில், தேர்வு கட்டணம், விண்ணப்பம் ஆகியவை பெறப்பட்டிருக்க வேண்டும். எதுவும் பெறாததால், மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்*


*🛑இதுகுறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது*


*🛑பிளஸ் 1 பொதுத்தேர்வில், அரசின் நிலைப்பாடு, ஆரம்பம் முதல், குழப்பத்திலேயே தொடர்கிறது. தேர்ச்சி பெற தவறியவர்கள், நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர்*


 *🛑ஆனால், பிளஸ் 1 தவறிய பாடங்களை, தேர்வெழுதி தேர்ச்சி பெற வேண்டுமா, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, பிளஸ் 1 தேர்ச்சி பெறாமல் இருப்பின், உயர்கல்வியில் சேர முடியுமா என்ற கேள்விகளுக்கு, கல்வித்துறை விளக்கம் அளிக்கவில்லை. இப்போதிருந்தே, தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும் தயாரானால் தான், மாணவர்களுக்கும் எளிதாக இருக்கும்*


 *🛑அதனால், பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, உரிய வழிகாட்டுதல்களை, கல்வித்துறை, உடனடியாக வெளியிட வேண்டும். அப்போது தான், மாணவர்களின் எதிர்காலம் பாழாவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்*



*SOURCE DINAMALAR WEBSITE*
Share:

Blog Archive

Definition List

நடுவன் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும்வரை தொடர்ந்து போராடுவோம்! பழைய ஓய்வூதிய முறை தொடர , பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்க!

Support