வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் உள்ள ஒரு அரசு நிதியுதவி பள்ளியில் கடந்த 2015ல் மாவட்ட ஆய்வுக்குழு ஆய்வாளர் அப்துல்ஹக் ஆய்வு மேற்கொண்டார். இதில் கடந்த 2012 முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை போலியாக கணக்கில் காட்டி, தலைமை ஆசிரியர் அரசு நிதியுதவி பெற்று மோசடிகளில் ஈடுபட்டது தெரியவந்தது
விசாரணையில், வாலாஜா கிழக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பூங்கோதை(47) இதற்கு உடந்தையாக இருந்ததும் ெதரிந்தது. புகாரின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2015 ஆகஸ்ட் 27ல் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரி விசாரித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கோதைக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
0 comments:
கருத்துரையிடுக