இளையராஜாவின் ராயல்டி கோரிக்கையால், பல குடும்பங்கள் வாழும்!" - தினா
இந்த உலகத்திலேயே அதிகமான பாடலுக்கு இசையமைத்தவர், ராஜா சார்தான். எந்த மொழியிலும் இப்படியான ஒரு இசைக் கலைஞர் இல்லை. 1000-க்கும் அதிகமான படங்களுக்கு, அதில் 5000-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார், இளையராஜா சார். இப்படியான ஒருவர், எங்க சங்கத்தின் உறுப்பினர்னு நினைக்கும்போதே, பெருமையா இருக்கு. முக்கியமா, சங்கத்தின் தலைவரா நான் இருக்கும்போது, ராஜா சார் தன்னோட ராயல்டி உரிமை, சங்கத்திற்குச் சேரும்னு சொல்லியிருக்கிறது, சந்தோஷமா இருக்கு.
ராயல்டி விஷயத்தைப் பொறுத்தவரை, இளையராஜா உள்பட பெரும்பாலான இசையமைப்பாளர்கள் IPRS (Indian performing right society) என்ற அமைப்பைத்தான் நம்பிக்கிட்டு இருந்தோம். 1967-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், இந்தி, தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் இருந்தாங்க. இந்த அமைப்பு, உறுப்பினர்களாக இருக்கும் இசையமைப்பாளர்களின் பாடல்களை யார் யார் எங்கெங்கு ஒலி/ஒளிபரப்பு செய்றாங்கனு கண்காணிக்கணும். ஆனா, பாலிவுட் சினிமாவைத் துல்லியமாகக் கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நியாயமான காப்புரிமைத் தொகையைப் பெற்றுத் தரும் இந்த அமைப்பு, தமிழ் சினிமாவை மோசமாகவே நடத்தியது. உதாரணத்துக்கு, 5 படங்களுக்கு இசையமைத்த பாலிவுட் இசையமைப்பாளருக்குக் கிடைக்கும் தொகைதான், ஆயிரம் படங்களுக்கு வேலை பார்த்த தமிழ் இசையமைப்பாளருக்கும் கிடைக்கும். இதை எதிர்த்து, IPRS அமைப்பின் சேர்மன் ஜாவேத் அக்தர் என்பவருடன் கருத்து மோதலாகி, இந்த அமைப்பில் இருந்தே வெளியேறினார், இளையராஜா. அவர் கேட்டதில் என்ன தப்பு இருக்கு?!
நியாயப்படி, இளையராஜா சார் செய்தது நல்ல காரியம். இதனால் பல குடும்பங்கள் வாழும். பலரும் அவர் கேட்கிற ராயல்டி தொகையை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. சமூக வலைதளங்களில் உண்மை தெரியாம, கலாய்ச்சுக்கிட்டு இருந்தாங்க. அவரைப் பற்றி தப்பா பேசுறது, எனக்குக் கவலையா இருக்கு. இனிமேலாவது, அவர் ஏன் அப்படி ஒரு வீடியோவில் தோன்றிப் பேசினதுக்குப் பின்னாடி இருக்கிற பொதுநலத்தைப் புரிஞ்சுக்கோங்க." என்று முடித்த தினாவிடம், சில கேள்விகள்.
"அந்த வீடியோவை வெளியிடுவதற்கு முன், இளையராஜா ராயல்டி தொகை சம்பந்தமா உங்க சங்கத்தில் பேசினாரா?"
"எங்ககிட்ட பேசி முடிவெடுத்த பிறகுதான், அவர் வீடியோவில் பேசினார். சங்க உறுப்பினர்கள் எல்லோரும் கலந்து பேசி, இளையராஜா கொடுத்த காப்புரிமை விஷயத்தை விவாதித்து, ஏற்றுக்கொண்டு, ஒரு அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கை வெளியான அடுத்தநாள்தான் இளையராஜா சார் வீடியோவில் பேசி, நியாயமாகக் கிடைக்க வேண்டிய ராயல்டியைக் கேட்டார்."
இளையராஜா சங்கத்துக்கு அறிவித்த காப்புரிமை எந்த வழிகளில் சங்க உறுப்பினர்களுக்குச் சேரும்?"
"சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்குத் தேவையான பண உதவி, மருத்துவ உதவி, பென்ஷன் எனப் பல வழிகளில் இதைப் பயன்படுத்துவோம். ராஜா சார் கொடுத்த ராயல்டி தொகையை சங்க உறுப்பினர்களின் நலனுக்காக மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்துவோம்."
சனி, 8 டிசம்பர், 2018
Home »
» இளையராஜாவின் ராயல்டி கோரிக்கையால், பல குடும்பங்கள் வாழும்!" - தினா-_--வெளிவராத உண்மைகள்
0 comments:
கருத்துரையிடுக