தமிழ் மண்ணின் ஆசிரியச் சொந்தங்களே!
ஆசிரியச் சொந்தங்களின் நலனுக்காக தன் வாழ்வின் அத்தனை சுகங்களையும் இழந்த தலைப்போராளி அண்ணண் ஜே.எஸ்.ஆர் அவர்களின் அன்புத் தம்பிகளே!
CPS ஒழிப்பு இயக்கம் என்ன செய்துவிடும் என்று பல பெரிய இயக்கங்களின் சில தலைமைகள் கேலியாக, கிண்டலாக அறைகூவல் விடுப்பதைக் காணமுடிகிறது.
CPS ஒழிப்பு இயக்கத்தின் மாநில , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் களை சோர்வடைய செய்யும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.
2004 ல் நம்மை அதாவது ஆசிரியர்கள்,அரசூழியர்களை கல்விப் பிடித்தCPS என்ற கொடிய விஷப் பாம்பின் பிடியிலிருந்து தனி இயக்கமோ,ஒருங்கிணைந்த ஆசிரியர்,அரசூழியர் இயக்கங்களோ இதுவரை 16 ஆண்டுகளாக காப்பாற்ற இயலவில்லை.
ஜேக்டோ ஜியோ உயர் மட்ட குழு இதுவரை கூட்டப்படவில்லை.ஒருங்கிணைப்பாளர்களே வருடக்கணக்கில் முடிவெடுப்பதும் , செயல்படுவதும்,செயல்படாமல் இருப்பதும் ஏற்புடையதுதானா?
2017 போராட்டம் வெற்றியடைந்தது அனைத்து இயக்கங்களும் ஜேக்டோ ஜியோவில் இணைந்து போராடியதால் அல்ல.போராடாத இயக்கத்தின் உறுப்பினர்களும் கூட இயக்கத்தை மறந்து போராட்டக் களத்திற்கு வந்ததால்தான்.
தேர்தல் நெருங்கிவிட்டது.இயக்கங்கள் ஒருங்கிணைய முடியவில்லை.ஒருங்கிணைந்த இயக்கங்கள் ஒருமித்த கருத்துக்கு வரமுடியவில்லை.
CPS பாதிப்பில் இருக்கும் அப்பாவி ஆசிரியர்கள் , ஊதிய பாதிப்பில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களிடம் பழைய கதைகளை கதைப்பதால் பயன் என்ன? இன்றைக்கு எந்த தனிச்சங்கமும் எதையும் சாதித்திட முடியாது.
கொரானா காலத்திலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் தொடங்கிவிட்டார்கள்.
16 வருடம் எவ்வித முன்னேற்றமும் காணாமல் இருக்கும்CPS பிரச்சினை யில் ஆசிரியர்கள் அதற்காகவே ஒருங்கிணவது காலத்தின் கட்டாயம்.தவிர்க்க இயலாதது.ஆசிரியர்கள் நலனுக்காக இயக்கம் நடத்துபவர்கள் ஆதரவை தருவதுதான் சரி.இல்லையென்றாலும் ஆசிரியர்கள் இயக்க கட்டுப்பாட்டை மீறி கலந்து கொள்வார்கள்.ஏனெனில் அது அவர்களின் சொந்த நலனுக்கான போர்.
சுய நலத் தலைவர்கள்,சுய கௌரவத்திற்காக இயக்க உறுப்பினர்கள் நலனை அடகு வெய்க்கும் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த கட்சி நலனுக்காக முடிவெடுக்கும் தலைவர்கள் ஆகியோரை அடையாளம் கண்டே உள்ளார்கள்.
இப்போதும் கிடைக்கும் வாய்ப்பை தவறவிட அவர்கள் தயாராக இல்லை.
அதை விரைவில் தமிழகம் காணும்.
CPS ஒழிப்பு இயக்கம் செயல்பாடுகள் வெற்றி பெறும்.
டே.குன்வர் சோசுவா வளவன்.
மாநில தலைவர்.
ஜே.எஸ்.ஆர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
திங்கள், 7 டிசம்பர், 2020
CPS ஒழிப்பு குழு என்ன செய்யும்
வெள்ளி, 30 அக்டோபர், 2020
சகாயம் ஐ.ஏ.எஸ்.விருப்ப ஓய்வு அளித்துள்ள இரகசியம்
வியாழன், 15 அக்டோபர், 2020
செவ்வாய், 6 அக்டோபர், 2020
திங்கள், 21 செப்டம்பர், 2020
ஞாயிறு, 20 செப்டம்பர், 2020
மாநகராட்சி பள்ளிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மாணவர் சேர்க்கை.
சனி, 19 செப்டம்பர், 2020
பள்ளிக்கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிக்கு 635 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை
வெள்ளி, 18 செப்டம்பர், 2020
செவ்வாய், 15 செப்டம்பர், 2020
ஞாயிறு, 13 செப்டம்பர், 2020
இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது தனிஊதியம் 2000 சேர்த்து கணக்கிடப்பட வேண்டுமா? ஜே.எஸ்.ஆர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் கேள்விக்கு முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.
சனி, 12 செப்டம்பர், 2020
வியாழன், 10 செப்டம்பர், 2020
செவ்வாய், 8 செப்டம்பர், 2020
புதிய கல்வி கொள்கை ஆய்வு செய்ய பள்ளி கல்வி துறை சார்பில் தமிழகத்தில் குழு
புதிய கல்வி கொள்கை இயக்கங்கள் கருத்து கேட்பு தமிழகத்தில் தொடங்குகிறது.
ஞாயிறு, 6 செப்டம்பர், 2020
கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் டிஜிட்டல் முறைக்கு மாறிய ஆசிரியர் தின விழா: வீட்டிலிருந்தவாறு நடனமாடி வாழ்த்துக்கூறிய மாணவிகள்
சனி, 5 செப்டம்பர், 2020
ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் இல்லை
வியாழன், 3 செப்டம்பர், 2020
புதன், 2 செப்டம்பர், 2020
நல்லாசிரியர் விருது விழா செப்டம்பர் 7க்கு மாற்றம் செய்யப்பட்டது
தேவையில்லாத காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது*.
*தேவையில்லாத காரணங்களுடன் உத்தரவு பிறப்பித்த வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது*.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி இலங்குளம் ஆர்.சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு இடைநிலை ஆசிரியராக ஏ.பாக்கியா ரெக்ஸிலின் நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தை நிராகரித்து வட்டார கல்வி அலுவலர் 23.1.2019-ல் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து, தனது பணி நியமனத்தை அங்கீகரிக்கக்கோரி பாக்கியா ரெக்ஸிலின் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
வட்டார கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவில் பள்ளி நிர்வாகத்தின் கடிதத்தை நிராகரிக்க தேவையற்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர் நியமனத்தை அங்கீகரிக்க கடிதம் அனுப்பும் போது, பள்ளியின் தீத்தடுத்து மற்றும் சுகாதாரச் சான்றிதழ் கேட்பது அபத்தமானது. இதுவரை கேள்விப்படாத ஒன்று.
ஆசிரியர் பணி நியமனத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் மாவட்ட கல்வி அலுவலருக்கு தான் உண்டு. வட்டார கல்வி அலுவலர் பள்ளியின் கடிதத்தை மாவட்ட கல்வி அலுவலருக்கு பரிந்துரை மட்டுமே செய்ய வேண்டும்.
பரிந்துரை அதிகாரம் மட்டுமே உள்ள வட்டார கல்வி அலுவலர் இயந்திரத்தனமாக செயல்பட்டு, தேவையற்ற காரணங்களை கூறி பள்ளியின் கடிதத்தை நிராகரித்துள்ளார்.
வட்டார அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகள் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிப்பது இதுவே முதல் முறையல்ல. பலமுறை நடைபெற்றுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தை நாடுவதால் நீதிமன்றத்தின் சுமை தேவையில்லாமல் அதிகமாகிறது.
நீதிமன்றம் பலமுறை தெரிவித்தும் மனதை செலுத்தாமல் தேவையற்ற காரணங்களை குறிப்பிட்டு இயந்திரத்தனமாக உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளை ஏற்கக்கூடாது. பொருந்தா காரணங்களை கூறி உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
எனவே நாங்குநேரி வட்டார கல்வி அலுவலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவர் 2 வாரத்தில் பணத்தை கரோனா நிவாரணப் பணிக்காக உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். வட்டார கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கை மீது மாவட்ட கல்வி அலுவலர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
வெள்ளி, 8 மே, 2020
ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி.59 வயது வரை அரசூழியர், ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு இயக்க நிலைப்பாடும்.வேண்டுகோளும்
இயக்க நிலைப்பாடும்.வேண்டுகோளும்!
59 வயது வரை அரசூழியர், ஆசிரியருக்கு பணி நீட்டிப்பு என்ற அரசாணை என் 51 பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறை நாள் 07/05/2020 வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை இயக்கங்கள் அல்லது ஆசிரியர்,அரசூழியர் கோரிக்கை மீது வழங்கப்பட்டது அல்ல.
இது நிதி நிலையை கருத்தில் கொண்டு அல்லது தற்போது 2020-2021 ல் ஓய்வு பெறுபவர் ஓய்வூதிய பலன்களை வழங்க மனமின்றி எடுக்கப்பட்ட முடிவு.
இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பை பறித்து இளைஞர்கள் வாழ்வை சீரழித்துவிடுமா? என்றால் இல்லை.
ஏற்கனவே புதிய வேலை வாய்ப்புகளை பறிக்கும் அரசாணைகள் ஒப்பந்த அடிப்படையில் நியமன அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும்,போராட்ட காலத்தில் நம் வேலையை பறித்து ஒப்பந்த ஆசிரியர் நியமனம் செய்ய அரசு முடிவு செய்த போது லட்சக்கணக்கில் விண்ணப்பித்த சமூகம் இது.
அவர்களுக்கு முறையாக பணியளிக்க வேண்டும் என்றே போராடினோம்.
சமூகத்தைப் பற்றி கவலைப்படும் நேரத்தில் சக பணியாளர்கள் பற்றியும் கவலப்பட வேண்டும்.தற்போது ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் பற்றி கவலைப்படாமல் அவர்கள் கருத்து அறியாமல் பொத்தாம் பொதுவாக கருத்து கூற நம் இயக்கம் விரும்பவில்லை.
இந்த அரசாணை வேண்டாம் என்று கூறுவது அடுத்து வரும் அரசுக்கும் நாம் கூறுவதுபோல் ஆகிவிடும்.
ஆதரிப்பது இந்த நிலையில் அரசு நம் நன்மைக்காக அரசாணை வெளிட்டது என்பதாக ஆகிவிடும்.எனவே , வீண் விவாதம் ஆக்காமல் மௌனமாக கடந்து செல்வதே சரி என இயக்கம் கருதுகிறது.
எனவே, ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கம் சக இயக்க தலைமைகள்,ஜேக்டோ -ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பு இயக்கங்கள், ஒருங்கிணைப்பாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோரை அன்போடு கேட்டுக் கொள்வது இந்த அரசாணை விளம்பரப் படுத்தவோ இது குறித்து பேட்டிகள் ஊடகங்களில் பேட்டியளிக்கவோ வேண்டாம் மறுபரிசீலனை செய்யுங்கள்!!இதுவே இன்றைய கொரானா நெருக்கடி நிலையில் நல்லது.
இவண்,
மாநில அமைப்பு.
டே.குன்வர் சோசுவா வளவன்
மாநில தலைவர்
சி.ஜெகந்நாதன்
பொதுச்செயலாளர்.
வை.பொய்யாமொழி
மாநில பொருளாளர்.
ஜே.எஸ்.ஆர். தமிழ் நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி.
திங்கள், 13 ஏப்ரல், 2020
வியாழன், 2 ஏப்ரல், 2020
கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? கோவை KMCH கல்லூரி மாணவர்கள்ஆய்வு முடிவுகள்
கபசுர குடி நீர் வைரசை அழிக்குமா? ஆய்வு முடிவுகள்
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நீண்ட காலம் மக்கள் பயன்படுத்தி வரும் கபசுர குடி நீர்
இயற்கை வைத்தியம் குறித்து கோவை KMCH கல்லூரி மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளனர்.அம்முடிவுகளை
INTERNATIONAL JOURNAL OF CURRENT ADVANCED RESEARCH அங்கீகரித்துள்ளது.அந்த ஆராய்ச்சியில் கபசுர குடி நீர் பன்றி காய்ச்சல் மருந்தாக மற்றும் ,ஆண்டி வைரல் ஆகவும்,ஆண்டி பையாடிக் ஆகவும் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட கபசுர குடி நீர் பயன்படுத்தலாம் என மக்களிடையே பரவலாக கருத்து ஏற்பட்டுள்ளது.எனினும் இது குறித்து அரசு அங்கீகரமாக எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.டெங்கு காய்ச்சல் போது நில வேம்பு குடி நீரை பரிந்துரைத்தது.
புதன், 25 மார்ச், 2020
நூறாண்டுக்கு ஒரு முறை பேரழிவு நோய்
வெள்ளி, 13 மார்ச், 2020
அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு!
வியாழன், 5 மார்ச், 2020
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு! சேமிப்பில் அக்கறை காட்டாத மத்திய அர்சு!
மத்திய அரசின் நடவடிக்கைகள் தனியார் மயத்தையும்,கார்ப்பரேட்களை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது.இதை நிரூபிக்கும் விதமாக எல்.ஐ.சி.பங்குகளை தனீயாருக்கு விற்க முடிவு செய்தது ,வருமான வரி விலக்கிற்கு சேமிப்பை ஊக்குவிற்காத நடைமுறையை அறிமுகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் இருக்கின்றன.தொடர்ந்து தற்போது 2019 - 2020 நிதியாண்டிற்கு வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.65% லிருந்து 8.5 % ஆக குறைத்துள்ளது.1999 - 2000 முடிய 12% ஆக இருந்த கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தற்போது 8.5 % ஆகிவிட்டது.இது பங்கேற்பு ஓய்வூதிய சேமிப்பிற்கும் பொருந்தும்.
பயோ மெட்ரிக் ரத்து-
வியாழன், 23 ஜனவரி, 2020
திங்கள், 13 ஜனவரி, 2020
ஜனவரி 2020 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி எவ்வளவு கிடைக்கும்!
முடிவடைந்த நவம்பர் 2019 ல் விலைவாசிப்புள்ளி 328 ஆக உள்ளது என்று மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அறிக்கை கூறுகிறது.டிசம்பர் 2019 ல் விலைவாசிப்புள்ளி 331 ஆக உயர வாய்ப்புள்ளது.அதன்படி கணக்கிட அகவிலைப்படி 01/01/2020 முதல் 4%அதிகரித்து 17% ல் இருந்து 21% ஆக அறிவிக்க வாய்ப்புள்ளது.